|
முதற்பாகம்
அரியதவமாகவும் எமது
பந்துக்களின் சரீரத்தில் நிறைந்த ஜீவனாகவும் அருமையுற்ற சஞ்சீவியாகவும் எம் சகோதரர் அப்துல்லா
அவர்களி னிடத்திலிருந்த இரத்தினமாகவும் இவ்வுலகின்கண் உதயமான முகம்மதென்று சொல்லும் வாலிபரின்
கருத்தானது பொருந்தும்படி இன்பமுற ஒருவிவாகஞ் செய்வதற்காய் இவ்விடத்தில் வந்து சேர்ந்தேனென்
றிப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கினார்கள்.
1082.
இந்நகரிற்
குறைசிகணம் மினத்தவரின்
மதித்தவர்தம்
மிடத்தில் வாய்ந்த
பொன்னனைய மடவாரைத்
தருதுமென
வவரவரே
புகல்கின் றாராற்
றன்னவரிற் பெரியாரின்
மதியாரிற்
றவத்தோரிற்
றலைமை யோரி
னின்னையல திலையெனவே
வவருரைத்த
மொழியனைத்து
நிகழ்த்தி யன்றே.
49
(இ-ள்) இந்த மக்கமாநகரத்தின்கண் குறைஷிகளான
நமது பந்துக்களில் மதிக்கப்பட்டவர்கள் தங்கள் தங்களிடத்திற் பொருந்திய முண்டகாசனையைப்
போலும் பெண்களை அந்த முகம்மதுக்கு மனையாளாக விவாகஞ் செய்து தருகின்றோமென்று அவரவரே
சொல்லுகின்றார்கள். ஆனால் தன்னவர்களாகிய அவர்களனைவர்களும் பெரியோர்களிலும் அறிவாளர்களிலும்
தவத்தார்களிலும் முதன்மையார்களிலும் உன்னையல்லாமல் வேறேயொருவருமில்லரென்று அவர்கள்
சொன்ன வர்த்தமானங்க ளெல்லாவற்றையும் உன்னிடத்தில் சொல்லி.
1083.
மாற்றுரைநின்
கருத்திலுறும் படிகேட்டு
வருதியென
மறுவி லாது
போற்றியுரைத்
தனரெனது முன்னோரி
னுரைப்படியே
புகன்றேன் மிக்க
தேற்றமுறு மனத்தாய்ந்து
நிகழ்காலம்
வருங்காலச் செய்கை நோக்கி
யூற்றமுட னுரைத்திடுக
வவ்வுரையின்
படிநடப்ப துறுதி
யென்றார்.
50
(இ-ள்) உன்னுடைய எண்ணத்திற் பொருந்திய
வண்ணம் பதில்வார்த்தை கேட்டுக் கொண்டு வருவாயாகவென்று எனது ஜேஷ்டராகிய அபீத்தாலிபவர்கள்
குற்றமில்லாது புகழ்ந்து சொன்னார்கள். அவர்களின் சொற்படி யானும் இங்கு வந்து பேசினேன்.
ஆதலினால் அதிகத் தெளிவுற்ற உனது மனத்தின்கண் ஆராய்ந்து நடக்கின்ற காலம் இனிமேல் வாராநிற்கும்
காலத்தினது
|