பக்கம் எண் :

சீறாப்புராணம்

433


முதற்பாகம்
 

     (இ-ள்) அன்றியும், செழிய பனிநீருடன் சந்தனத்தையும் கஸ்தூரியையும் வாசனையையுடைய மெல்லிய நறியதுகளோடு கலவைச் சேற்றையும் பரிமளமோங்கும் வண்ணம் கலக்கும்படி செய்து சந்திரனானது தனது வெள்ளிய கிரணங்களை விரித்த மதில்களின் நடுவில் விடுவார்கள். வீதியினிடங்க ளெல்லாவற்றிலும் சிந்துவார்கள். எங்குமிடமின்றித் தெளிப்பார்கள்.

 

1123. வட்ட வான்மதி முகத்திய ரிடத்தும்வாள் விரித்து

     விட்ட வேற்கர வீரர்க ளிடத்தினு மெதிர்ந்து

     தொட்டி தோறும்பன் னீர்சொரிந் தருநறை மறுவி

     யிட்ட சந்தனக் குழம்புகள் கரைத்திறைத் திடுவார்.

27

     (இ-ள்) அன்றியும், வட்டவடிவை யுடைய அழகிய சந்திரன் போலும் முகத்தை யுடையவர்களான பெண்களிடத்தும் நானா பக்கங்களிலும் பிரகாசத்தை விரியச் செய்து வீசிய வேலாயுதந்தாங்கிய கைகளையுடைய வீரர்களிடத்தும் எதிர்த்துத் தொட்டிகள் தோறும் பனிநீரைச் சிந்தி அரிய வாசனையையுடைய கஸ்தூரி போட்ட சந்தனக்குழம்புகளைக் கரையும்படி செய்து அள்ளிச் சொரிவார்கள்.

 

1124. கொந்து றைந்தபூம் பாளைவாய் வெள்ளிவெண் குடங்கள்

     சந்த மெனன்றை மெழுக்கிடுந் தலத்திடை தயங்கப்

     பந்தி யாகவைத் திருப்பது பானிலாக் கதிரோ

     டிந்து வாயில்க டோறும்வந் திருந்தன வியையும்.

28

     (இ-ள்) அன்றியும், பூங்கொத்துகள் தங்கிய அழகிய பானையினைக் கொண்ட வாயையுடைய வெண்ணிறம் பொருந்திய வெள்ளியினாலான கும்பங்களை வாசனையமைந்த மெல்லிய சந்தனத்தினால் பூசிய கலத்தின்கண் பிரகாசிக்கும்படி வரிசையாக வைத்திருப்பது சந்திரனானது வெள்ளிய பிரகாசத்தை யுடைய கிரணங்களுடன் வாயில்களெல்லாவற்றிலும் வந்திருந்ததை நிகரா நிற்கும்.

 

1125. பால னத்தொடும் பழத்தொடும் பசித்தவர்க் கிடுவார்

     கோல மென்றுகி னாடகர் கரத்தினிற் கொடுப்பார்

     சோலை வாய்க்குயி லெனுமிசை யவர்க்கணி சொரிவா

     ரேலு நன்மறை யவர்க்கிரு நிதியெடுத் திறைப்பார்.

29

     (இ-ள்) அன்றியும், பசியையுடைய ஏழைகளுக்குப் பாலைக் கொண்ட அன்னத்துடனும் பழத்துடனும் விருந்துகள் கொடுப்பார்கள். அழகிய மிருதுவான வஸ்திரங்களை நாடகர்களின் கைகளில் கொடுப்பார்கள். சோலையினிடத்துள்ள