|
முதற்பாகம்
குயில்களினது இராகத்தை
யொத்துப் பாடாநிற்கும் இராகத்தையுடைய பெண்களுக்கு அதிக ஆபரணங்களைக் கொடுப்பார்கள்.
பொருந்திய நல்ல வேதியர்களுக்கு மகத்தான திரவியங்களை எடுத்து மிகக் கொடுப்பார்கள்.
1126.
வான மாமுகி லெனச்சொரி
தரவரு மாந்தர்
தூந றுங்கதிர் மணியொடு
நிதியினைச் சுமந்து
தீன ரியாசக
ரியாரெனத் தெருத்தொறுந் திரிந்து
தான மேற்பவ
ரில்லென மனத்திடை சலிப்பார்.
30
(இ-ள்) அன்றியும், ஆகாயத்தின் கண்ணுள்ள
மகத்தான மேகத்தைப் போலப் பொழியும் வண்ணம் இவ்வுலகத்திலுதயமாய் வந்த ஜனங்கள் பரிசுத்தமான
நறிய கிரணங்களையுடைய இரத்தினவர்க்கங்களோடும் திரவியங்களை எடுத்துச் சுமந்து கொண்டு அந்தத்
திருமக்கமா நகரத்தின் கண்ணுள்ள வீதிகளெல்லாவற்றிலும் அலைந்து வறுமையாளிகள் யாவர்? இரப்பவர்கள்
யாவர்? என்று விசாரித்து ஈகைபெறுவோர்கள் இவ்விடத்தி லில்லையென்று மனசின்கண் சலிப்படைவார்கள்.
1127.
மதியின் மிக்கவ
ரொருவரால் வருங்கிளை யனைத்துங்
கதியும் வெற்றியும்
வீரமும் பெறுவரக் கதைபோற்
புதிய பேரொளி முகம்மதின்
மணவினைப் பொருட்டாற்
பதியும் வீதியு
மாடமு மணம்படைத் ததுவே.
31
(இ-ள்) அன்றியும், அறிவினால் மிகுந்தவரான
ஒரு மகாத்துமாவால் அந்தக் குடும்பத்தில் வராநிற்கும் எல்லாவரும் மோட்சத்தையும், விஜயத்தையும்,
வீரத்தையும் பெற்றுக் கொள்ளுவார்கள். அந்தச் சரித்திரத்தைப் போல நூதனமாகிய பெரிய பிரகாசத்தினை
யுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் விவாகச் செயலினது பொருட்டினால்
அந்தத் திருமக்கமாநகரமும் அங்குள்ள தெருக்களும் வீடுகளும் பரிமளத்தைப் பெற்றுக் கொண்டன.
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
1128.
சிறுபிறை நுதற்க
தீசா திருமனை யிடத்தும் வெற்றி
விறலபித் தாலி
பென்னு மெய்மையோர் மனையின் முன்னு
மறபிகண் மனையுஞ்
செம்பொ னாவணத் திடத்தும் வேந்தர்
மறுகுக டோறுஞ் செல்வ
மணச்சிறப் பியன்ற பின்னர்.
32
(இ-ள்) இவ்விதமாய் இளஞ்சந்திரன்
போலும் நெற்றியினையுடைய கதீஜாநாயகியவர்களின் சிறந்த வீட்டினிடத்திலும் வெற்றியினது வீரத்தைக்
கொண்ட
|