|
முதற்பாகம்
அபீத்தாலிபென்று சொல்லும், சத்தியத்தையுடையவர்களின் வீட்டினிடத்திலும் மற்றும் அந்த மக்கமா
நகரத்தின் கண்ணுள்ள அறபிகளின் மனைகளிலும் சிவந்த திரவியத்தைப் பெற்ற கடைவீதிகளி னிடத்திலும்
அரசவீதிக ளெல்லாவற்றிலும் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் செல்வத்தையுடைய
விவாகாலங்காரமிசைந்தனபின்னர்.
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் (வேறு)
1129.
அற்புதமாய் விண்ணவரும் புகலரிய
ஆபுஸம்சத் தரிய நீரைப்
பொற்குடத்தி லெடுத்தமுதக்
கதிர்கிரண
மலைமிசையே பொழிவ போலச்
சிற்பரியற் றியபலகை
நடுவிருத்தி
முகம்மதுதன் சிரசின் மீதே
சொற்பழுத்த மறைமுதியோர்
மங்கலவாக்
கியங்கறங்கச் சொரிந்தா ரன்றே.
33
(இ-ள்) தேவர்களான மலாயிக்கத்து மார்களும் ஆச்சரியமாய்ச் சொல்லுதற்கரிய ஹலறத்து
இசுமாயில் அலைகிஸ்ஸலா மவர்களின் திருக்கரத்தினது விரல்களால் அகழப்பட்ட ஆபுஸம்ஸமென்னும் பெயரையுடைய
கிணற்றினது அரிய ஜலத்தைப் பொன்னினாலான குடத்தில் எடுத்து சிற்பர்களினால் செய்யப் பெற்ற
ஒரு பலகையினது நடுவில் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை இருக்கும்படிசெய்து
அவர்களின் தலையின் மீது முற்றிய வார்த்தைகளையுடைய வேதவயோதிபர்களின் மங்கல வாக்கியங்கள்
முழங்கும் வண்ணம் சந்திரனானது தனது கிரணங்களைப் பொன்னிமா மலையின் மீது சொரிவதைப் போலச்
சொரிந்தார்கள்.
1130.
மஞ்சனத்தீ ரம்புலர்த்தி
விரைவாகப்
புகைக்கொழுந்து வயங்கச் சேர்த்திப்
பஞ்சினின்மென் றுகிலரையி
னெடுத்தணிந்து
செழுஞ்சுவன பதிக்கு மேலா
ரெஞ்சலில்வெண் கதிர்திரண்டு
வந்திருந்த
தெனச்சருவந் திலங்கச் சூட்டிக்
கஞ்சமல ரெனச்சேந்த கண்ணிணையிற்
சுறுமாவுங் கவினச் செய்தார்.
34
(இ-ள்) சுவர்க்கலோகத்திற்கு மேலோராகிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு
அவ்வாறு சொரிந்து ஸ்நானஞ் செய்வித்த நீரினது ஈரத்தை யுலரும்படி செய்து பரிமளத்தை யுடைய
கலவைச்சேறு புகைக்கொழுந்தாகிய
|