பக்கம் எண் :

சீறாப்புராணம்

436


முதற்பாகம்
 

இவைகளைப் பிரகாசிக்கும் வண்ணம் சேர்த்து அரையின்கண் பஞ்சைப் பார்க்கிலும் மிருதுவான வஸ்திரத்தை எடுத்து உடுத்திக் குறைவில்லாத வெள்ளிய சந்திரன்கள் ஒன்றுகூடி வந்திருந்தாற்போல வெண்ணிறத்தைக் கொண்ட பாகையைத் தலையினிடத்து விளங்கும்படி சூட்டித் தாமரைப் புஷ்பம் போலும் சிவந்த இருகண்களிலும் சுறுமாவும் அழகாய் எழுதினார்கள்.

 

1131. பொன்காலுந் திரண்முலையார் கண்ணேறு

         படராது பொதிதல் போலுஞ்

     சின்காத வழிக்ககலும் வேதமொழி

         யனைத்தும்வந்து செறிந்த போலும்

     வன்காபிர் விழிக்கணங்க டிருமேனி

         தீண்டாது மறைத்தல் போலு

     மின்கால வெண்கிரணக் குப்பாய

         மெடுத்தணிந்த வியப்புத் தானே.

35

     (இ-ள்) அன்றியும், பிரபையானது ஒளிரும்படி வெள்ளிய கிரணங்களையுடைய குப்பாயத்தை எடுத்துத் திருமேனியின்கண் அணிந்த ஆச்சரியமானது, பொன்போலும் பிரகாசியா நிற்கும் திரண்ட முலையையுடைய பெண்களின் கண்ணெச்சில் பரவாது மூடுதல் போலும். ஜின்கள் காதவழி தூரத்திற்ககன்று செல்லும் வேதவாக்கியங்கள் முழுவதும் ஒன்றாய் வந்து நிறைந்த போலும். வன்மையை யுடைய காபிர்களின் கண்களாகிய பிசாசுகள் தங்களின் திருமேனியைத் தொடாது மறைத்து வைத்தல்போலு மிருந்தன.

 

1132. மருந்தமுத மெனுங்கலிமாத் தனையிணங்கா

         ருயிரனைத்தும் வானி லேற்ற

     விருந்ததென வயிரமணிப் பிடியுடைவா

         ளெடுத்துமருங் கிடத்துச் சேர்த்து

     விரிந்தசெழுங் கரகமல விரலிதழின்

          மணியாழி விளங்கித் தோன்றப்

     பரிந்தணிந்தா ரழகுவெள்ளம் வழியாது

          மருங்கணைக்கும் பான்மை போன்றே.

36

     (இ-ள்) அன்றியும், தேவாமிர்தமென்று சொல்லா நிற்கும் தங்களது கலிமாவுக்கு இணங்காதவர்களின் ஆவிகளெல்லாவற்றையும் ஆகாயத்தின்கண் ஏற்றும் வண்ணம் இருந்ததைப் போன்ற வயிரரத்தினங்களைக் கொண்ட பிடியை யுடைய குற்றுடை வாளை யெடுத்து இடையின்கண் பொருந்தி விரிவுற்ற செழிய கையாகிய தாமரைமலரின் விரலான இதழ்களில் இரத்தின மோதிரம் பிரகாசித்து விளங்கும்படி அழகாகிய வெள்ளமானது