முதற்பாகம்
79.
வடவரைப்
புடைசூழ் நிலத்தெழு தீவும்
வரவழைத் தொருதலத் திருத்தித்
தடமுடிக்
கிரணத் திகிரிமால் வரையைச்
சதுர்தரப் புரிசையாய் நிறுத்தி
யிடனற
நெருங்கும் பெறும்புறக் கடலை
யிதற்கக ழெனப்பெய ரிட்டுப்
படவர
வரசன் றிருமுடி மணியைப்
பதித்தது மக்கமா நகரம்.
3
(இ-ள்) அன்றியும், அந்த
மக்கமா நகரமானது மகாமேருப் பருவதத்தைப் பக்கங்களில் வளையப் பெற்ற இந்தப் பூமியின்
கண்ணுள்ள நாவல், இறலி, குசை, கிரவுஞ்சம், புட்கரம், தெங்கு, கமுகென்னும் ஏழு தீவுகளையும்
வரும்படி செய்து ஒரு தானத்தில் இருக்கப் பண்ணிப் பெரிய சிகரத்தின் பிரகாசத்தையும்
பெருமையையுமுடைய சக்கிரவாளகிரியை நான்காகக் கோட்டை மதிலாய் நிற்கச் செய்து இடமறச்
செறியா நிற்கும் பெரிய புறத்தைக் கொண்ட சமுத்திரத்தை இக்கோட்டைக்கு அழகென்று அபிதானஞ்
சூட்டிப்படத்தையுடைய ஆதிசேடனென்னும் சர்ப்பராசனது அழகிய உச்சிதனிடத்துள்ள இரத்தினத்தைப்
பதிக்கப் பெற்றதை நிகர்த்தது.
80.
கானகத்
துறையும் வயிரவொண் கதிரோ
கடல்படு நித்திலக் கதிரோ
தேனவிழ்
பதும மணிக்கதி ரதுவோ
சிறந்திடு மக்கமா நகரில்
வானவர்க்
கிறைவன் ஜபுறயீல் பலகால்
வந்தவர் மெய்யொளி பாய்ந்தே
யீனமி
னகரஞ் செழுங்கதிர் பரப்பி
யிருப்பது பிறிதுவே றிலையே.
4
(இ-ள்) அன்றியும்,
சிறப்புற்றிடும் அந்த மக்கமா நகரத்தில், தேவர்களாகிய மலாயிக்கத்துமார்களுக் கரசரான
ஜபுறயீல் அலைகிஸ்ஸலாமவர்கள் பல தடவை வந்து அவர்களின் சரீரத்தினது பிரகாசமானது சாடிக்
களங்கமற்ற அந்நகரமானது செழிய கிரணங்களை விரித்து இருப்பது, வேறே காட்டின்கண் தங்கும்
ஒள்ளிய வயிரத்தினது பிரகாசமோ? சமுத்திரத்திலுண்டான முத்துக்களின் பிரகாசமோ? மதுவை
யவிழப்பெற்ற பதும மணியினது பிரகாசமோ? இல்லை.
81.
சரிகதி
வேக மாருதஞ் சிதையத்
தாவிய புரவியி னொலியு
நிரைமணி
யுருட்டுப் பசுங்கதி ரிரத
நெருக்கிட நடத்துபே ரொலியு
|