பக்கம் எண் :

சீறாப்புராணம்

45


முதற்பாகம்
 

     முரலடிச் சிறுகட் பெருமதப் பிறைக்கோட்

          டொருத்தலி னிடிமுழக் கொலியும்

     விரிதிரைக் கரங்கொண் டறையுவாப் பெருக்கும்

          வெருக்கொளத் தெருக்கிடந் தொலிக்கும்.

5

     (இ-ள்) அன்றியும், அந்த மக்கமா நகரத்தினது வீதியிற் சரியான மல்லம், மயூரம், வியாக்கிரமம், வானரம் இடபமென்னும் பஞ்சகதிகளையு முடைய வேகத்தைக் கொண்ட காற்றையும் சிதையும் வண்ணம் தாவுகின்ற குதிரைகளின் ஓசையும், வரிசையுற்ற இரத்தினங்களின் பசிய பிரகாசத்தைப் பெற்ற வுருட்டுகின்ற தேர்களானவை நெருங்கிடும்படி நடத்துகிற பெரிய ஓசையும், உரலைப்போன்ற பாதங்களையும் சிறிய கண்களையும் பெரிய மதங்களையும் வளைந்த கொம்புகளையுமுடைய யானைகளின் இடி முழக்கத்தையொத்த ஓசையும், விரிந்த அலைகளாகிய கைகளைக் கொண்டு அறைகின்ற சமுத்திரத்தினது ஓசையினது பெருக்கும் பயப்படும் வண்ணம் கிடந்து ஒலியாநிற்கும்.

 

     82. மின்னிடை நுடங்கச் சிலம்பொலி சிலம்ப

             மேகலைத் திரண்மணிக் கதிர்செம்

        பொன்னொடு மிலங்க மறுகிடைப் புகுந்த

             புனையிழைப் பிடிநடை மடவார்

        மன்னிய பதத்தி னலத்தக நிலத்தில்

             வரிபடக் கிடப்பன சிறந்த

        துன்னிதழ்க் கமலம் பதத்தினை நிகர்ப்பச்

             சுவட்டடி தொடர்வன போலும்.

6

     (இ-ள்) அன்றியும், அந்த மக்கமா நகரத்தினது வீதியின்கண் அலங்கரிக்கப்பட்ட ஆபரணங்களையும், பெட்டை யானை போன்ற நடையையுமுடைய மாதர்கள் நுழைந்து மின்னலை யொத்த மருங்குலானது அசையவும், சிலம்பினது ஓசையானது ஒலிக்கவும், மேகலாபரணத்தினது திரட்சியுற்ற இரத்தினங்கள் சிவந்த பொன்னுடன் பிரகாசிக்கவும், நடந்து பொருந்திய அவர்களின் பாதத்தினது செம்பஞ்சுக் குழம்பு பூமியின்கண் வரிசைபட பதிக்கப் பட்டவை, சிறப்பைக் கொண்ட நெருங்கிய இதழ்களையுடைய தாமரை மலர்கள் அவர்களின் பாதத்தை யொக்கச் சுவட்டடியை பின்பற்றுவனவற்றைப் பொருவா நிற்கும்.

 

     83. கண்ணகன் ஞாலம் விலைசொலற் கரிய

            கலைபல நிரைத்தலாற் பணியாற்

        றண்ணெனக் குளிர்ந்து பிறவுரு வமைத்துத்

            தரும்படி மக்கலப் பெருக்கான்