முதற்பாகம்
மண்ணினிற்
சிறந்த நகர்த்திர வியத்தான்
மரக்கலத் திறக்கிய சரக்கா
லெண்ணிறந்
தெழுநல் வளம்பல படைத்தங்
கிருந்தது கடைத்தெருத் தலையே.
7
(இ-ள்) அன்றியும், அந்த
மக்கமா நகரத்தினது கடை வீதியின் தானமானது இடமகன்ற இவ்வுலகம் விலை சொல்லுதற் கருமையான பல
வஸ்திரங்களை வரிசையாய் அடுக்கி வைத்திருப்பதாலும், ஆபரணங்களாலும், தண்ணெனக் குளிர்ந்து
தன்னைப்போலும் வேறோர் வடிவத்தை யமையச் செய்து தராநிற்கும் கண்ணாடிகளின் அதிகரிப்பாலும்,
இப்பூமியினிடத்துச் சிறப்புத்தங்கிய நாடுகளிலுள்ள திரவியங்களாலும், கப்பல்களிலிருந்து
இறக்கப்பெற்ற சரக்குகளாலும், கணக்கற்று ஓங்கா நிற்கும் நன்மைபொருந்திய பல செல்வத்தை
யுடையதாய் அங்கு தங்கியிருந்தது.
84.
மான்மதக்
குவையுஞ் சந்தனத் தொகையு
மணிக்கருங் காழகிற் றுணியும்
பான்மதிக்
குழவிக் குருத்தெனக் கதிர்கள்
பரப்பிய மதகரி மருப்புந்
தேனமர்ந்
தொழுகுங் குங்குமத் தொகையுஞ்
செறிதலா லுயர்ச்சியால் வளத்தா
லீனமி
லிமயப் பொருப்பெனப் பணைத்தங்
கிருந்தது கடைத்தெருத் தலையே.
8
(இ-ள்) அன்றியும், அந்த
மக்கமா நகரத்தினது கடைவீதியின் தானமானது, கத்தூரிக் குவியலும் சந்தனக்கட்டைகளின் கூட்டமும்
அழகிய கரிய நிறத்தைக் கொண்ட வயிரமோடிய அகிற் கட்டைகளின் துண்டங்களும் வெள்ளிய இளஞ்
சந்திரனது கருத்தைப்போலும் பிரகாசத்தை விரித்த மதங்கொண்ட யானைகளின் கொம்புகளும்
நறவமானது தங்கப்பெற்றுச் சிந்தாநிற்கும் குங்குமத்தினது தொகையும் நெருங்குவதாலும்
உயர்ச்சியாலும், செல்வத்தாலும் குற்றமற்ற இமைய மலையைப் போலப் பணைத்து
அவ்விடத்திலிருந்தது.
85.
தந்தியின் குழுவுங் குரகதத் திரளுந்
தடவரை பொருவுதேர்க் கணமுஞ்
சிந்துரப்
பிறைநன் னுதற்கருங் கூந்தற்
செவ்வரித் தடங்கண்ணார் நெருக்கும்
வந்தவர்
நினைத்த பொருளுமா ரமிர்தும்
வகைவகை தருதலான் மணியு
மிந்திர
தருவும் வறிதென மதர்த்தங்
கிருந்தது கடைத்தெருத் தலையே.
9
|