பக்கம் எண் :

சீறாப்புராணம்

459


முதற்பாகம்
 

ஒலிக்கவும், பிரகாசியா நிற்கும் துவசங்களும் சாமரங்களும் பரவவும், கொலைத் தொழிலைக் கொண்ட மதத்தையுடைய யானைகள் மிடையவும், ஐங்கதிகளையுமுடைய பல குதிரைகளும் இராஜர்களும் நெருங்கவும் வித்துவான்கள் இனிமையுடன் ஆசீர்வதிக்கவும், சாத்திரவல்லவனான குவைலிதென்பவன் இன்பத்தோடும் அலங்காரஞ் செய்த அவனினது புறவாயலின்கண்ணுள்ள பந்தரினகம் போய்ச் சேர்ந்தார்கள்.

 

1199. வரைதிரள் வயிரப் புயமுகம் மதுநன்

         மணமலர்க் காவணம் புகுதத்

     திரையினிற் பிறந்த வமுதெனு மொழியார்

         செழுமணித் தீபங்க ளேந்த

    விருபுற நெருங்கி யயினிநீர் சுழற்ற

         வெண்ணில ராலத்தி யெடுப்பப்

    பரவையின் மறையுங் குரவையுஞ் சிலம்பப்

         பரியைவிட் டிறங்கின ரன்றே.

103

      (இ-ள்) வயிரமலைபோலும் திரட்சியுற்ற தோள்களையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு நன்மை பொருந்தும்படி பரிமளத்தைக் கொண்ட புஷ்பங்களையுடைய அந்தப் பந்தரின்கண் போய் நுழையவே, சமுத்திரத்தின் கண்ணுதயமாகிய அமிர்தமென்று சொல்லா நிற்கும் வார்த்தைகளை யுடையவர்களான பெண்கள் தங்களின் கைகளில் செழிய இரத்தினத்தீபங்களைத் தாங்கவும், இருபக்கங்களிலும் நெருக்கமுற்று அயினிநீர் சுழற்றவும், கணக்கற்றவர்கள் ஆலாத்தியெடுக்கவும், சமுத்திரத்தினது ஒலியைப்போல வேதவாக்கியங்களும் குரவைகளும் ஒலிக்கவும், தாங்கள் ஏறியிருந்த குதிரையை விட்டுங் கீழே இறங்கினார்கள்.

 

1200. பணித்தொகை சுமத்தி யிளைத்தநுண் ணிடையார்

         பங்கயக் கரப்பனி நீரான்

     மணிப்பதம் விளக்கித் துகிலினாற் றுடைத்து

         வரிசையின் முறைபல பணித்தார்

     துணர்ப்பசுங் கொழுந்து மலர்களுஞ் சொரிந்த

         தூநறைப் பாயலி னடந்து

     கணிப்பருங் கதிர்கள் பாய்மணித் தவிசின்

         முகம்மது கவின்பெற விருந்தார்.

104

      (இ-ள்) அவ்வித மிறங்கவே ஆபரணத் தொகுதிகளைச் சுமத்தப்பெற்று வாட்டமுற்ற நுண்ணிய இடையையுடையவர்களான பெண்டுகள் தங்களின் தாமரைமலர் போலும் கைகளினால் பனிநீரைக் கொண்டு அவர்களின் அழகிய