|
முதற்பாகம்
(இ-ள்) அந்தகாரத்தினது
கூட்டங்களனைத்தையும் பிடித்து ஒரு ஸ்தலத்தின்கண் இருத்துவதைப்போலக் கூந்தலைக் கொண்டையாக
இறுகச்செய்து மதுவையருந்தி ஆறுபாதங்களையுடைய வண்டுக் கூட்டங்கள் அலம்பா நிற்கும் மலர்மாலைகளை
அக்கொண்டையின்மீது பிரகாசிக்கும்படி தரித்து திருத்தஞ் செய்தக் கொண்டையான மேகத்தையுடைய
நெற்றியாகிய சந்திரனுக் கிடையில் சூரியனும் வந்து பொருந்தியதைப் போலத் திருப்பிறையணிந்து
பொருத்துகின்ற இளஞ்சந்திரனில் விரிச்சிகனது கிரணங்கள் கிடந்து புரண்டதை நிகர்ப்ப நெற்றிக்கு
நெற்றிச் சுட்டியும் சேர்த்தார்கள்.
1203.
வள்ளையைக் கிழித்துக்
குமிழினைத் துரந்த
மதர்விழிக்
கஞ்சன மெழுதிக்
கொள்ளைவெண் கதிர்விட்
டுமிழ்மணிப் பணியைக்
கொழுமடற்
குழைமிசை சுமத்தித்
தெள்ளிய பணிலச்
செழுமணிக் கழுத்திற்
றிரள்பணித்
தொகைபல திருத்தி
விள்ளரும் பசிய
கழைக்குலம் பொருவா
விளங்குதோ
ளணிபல தரித்தார்.
107
(இ-ள்) அன்றியும்,
காதுகளாகிய வள்ளையைக் கிழியும் வண்ணம் செய்து மூக்காகிய குமிழினைத் துரந்த மதர்த்த கண்களுக்கு
மையெழுதிக் கூட்டமாகிய வெள்ளிய கிரணங்களை விட்டு உமிழா நிற்கும் இரத்தின அலுக்குத்துகளைச்
செழிய மடலைப் பெற்ற வள்ளையாகிய காதுகளிற் சுமத்தித் தெள்ளிய சங்கை நிகர்த்த செழுமையுற்ற
அழகிய கழுத்தில் திரட்சி பொருந்திய பலவித ஆபரணத் தொகுதிகளை மிகுவித்துச் சொல்லுதற்கரிய
பசுமை கொண்ட மூங்கிற் கூட்டமும் பொருந்தாத பிரகாசிக்கின்ற தோள்களுக்குப் பல ஆபரணங்களைப்
புனைந்தார்கள்.
1204.
கரவளை தரித்து
விரலணி பொருத்திக்
கதிர்கொண்மே
கலைபல புனைந்து
சரணினைச் சிலம்புஞ்
சில்லரிச் சதங்கை
தருசிறு சிலம்பொடு
தரித்து
விரிகதிர்ப்
பவளக் கொடியெனும் விரல்கள்
விளைந்தபோன்
மணிப்பணி செறித்துப்
பருதியின் கரங்கண்
டுவக்குறும் வனசப்
பதத்தலத்
தகமெழு தினரே.
108
(இ-ள்) அன்றியும்,
இரண்டு கைகளுக்கும் வளையல்களைத் தரித்து விரல்களுக்கு மோதிர முதலிய ஆபரணங்களைப்
|