|
முதற்பாகம்
பொருந்தச் செய்துப்
பிரகாசத்தைக் கொண்ட பலவித மேகலாபரணங்களைப் பூட்டி இரு கால்களுக்கும் பருக்கைக்கற்க ளமைந்த
சதங்கைகளையுடைய பாதசரத்துடன் தண்டைகளையும் புனைந்து விரிந்த பிரகாசத்தைப் பெற்ற பவளக்கொடிக
ளென்று சொல்லும் கால்விரல்கள் முற்றியதைப் போல இரத்தினப் பணிகளை மிகுவித்துச் சூரியனது
கிரணங்களைப் பார்த்து மகிழ்ச்சி யடையா நிற்கும் தாமரைமலர் போன்ற இரு பாதங்களுக்குச் செம்பஞ்
செழுதினார்கள்.
1205.
மறுவியும் புழுகுஞ்
சுண்ணமுஞ் சாந்தும்
வடித்தபன்
னீரொடுங் குழைத்துப்
பொறிநிகர்
பொருவாச் செழுங்குழை யமிர்தப்
பொலன்றொடி
மெய்யினிற் பூசிச்
சிறுநுதற் பெருங்கட்
குவிமுலைச் செவ்வாய்ச்
சேடிய
ரிருமருங் கீண்டிக்
கறைதவிர் மதியந்
தொழுமுழு மதிக்குக்
கலந்தகண்
ணெச்சிலுங் கழித்தார்.
109
(இ-ள்) அன்றியும்,
கஸ்தூரியையும், புழுகையும், சுண்ணப் பொடியையும், சந்தனத்தையும், தெளியச் செய்து வடிக்கப் பெற்ற
பனிநீருடன் குழைத்து இலக்குமியும் ஒப்பாகப் பொருந்தாத செழிய குழையினைக் கொண்ட அமிர்தம்
போலும் அழகிய வளையல்களை யுடையவர்களான அக்கதீஜா நாயகியவர்களின் திருமேனியின்கண் பூசிச்
சிறிய நெற்றியையும், பெரிய கண்களையும், குவிந்த முலைகளையும், சிவந்த வாயையுமுடைய பாங்கியர்கள்
இருபக்கங்களிலும் கூடிக் குற்றமற்ற சந்திரனும் நாம் ஒப்பாக மாட்டோமென்று சொல்லித் தொழா
நிற்கும் பூரணச் சந்திரனாகிய அவர்களுக்குக் கலப்புற்ற கண்ணேறும் கழித்தார்கள்.
1206.
செறிந்தசந்
தனமுங் கலவையும் புழுகுஞ்
சிலதியர்
தட்டினி லேந்த
வெறிந்தசா மரையின்
கதிர்கள்கொப் பிளிப்ப
விலங்கிழை
யிகுளைய ரேந்த
வுறைந்தபா ளிதம்பா
கிலையெடுத் தேந்தி
யொருங்கினிற் சிலதிய ருதவ
நிறைந்தபூண்
சொரிந்த கோடிகஞ் சுமந்து
நின்றனர்
மடவிய ரொருங்கே.
110
(இ-ள்) அன்றியும்,
ஏவற்செய்யும் தோழிப்பெண்கள் செறியப் பெற்ற சந்தனத்தையும் கலவைச் சேற்றையும் புழுகையும்
தட்டுகளில் ஏந்தவும், பிரகாசியா நிற்கும் ஆபரணங்களை யுடைய
|