|
முதற்பாகம்
தோழிப்பெண்கள்
வீசுகின்ற சாமரங்களின் கிரணங்களை கக்கும் வண்ணம் தாங்கவும், சில ஏவல் செய்யும் தோழிப்பெண்கள்
கூட்டமாய் உறைதலுற்ற பாளிதம் அடைக்காய் வெற்றிலையாகிய இவைகளை எடுத்து ஏந்திக்
கொடுக்கவும், சில பெண்கள் கூட்டமாய் ஆபரணங்களைப் பொழிந்த பூரணமாகிய அணிகலச் செப்பைச்
சுமந்து கொண்டு நின்றார்கள்.
1207.
பேரழ கொழுகும் பெண்ணலங்
கனியைப்
பிரசமூ றியமொழிக்
கரும்பை
யாரணக் கடலுக்
கமுதநா யகியை
யரிவையர்
முறைமுறை வாழ்த்திப்
பாரினிற் செறித்த
மலர்மிசை நடத்திப்
பல்லிய முரசொடு
கறங்க
வார்பொரு முலையார்
முகம்மது மருங்கின்
மணித்தவி
சிடத்திருத் தினரே.
111
(இ-ள்) அவர்கள்
அவ்விதம் நிற்கப் பெரிய அழகொழுகா நிற்கும் பெண்களின் நன்மை பொருந்திய கனியானவர்களைத்
தேனானது சுரக்கப் பெற்ற வார்த்தைகளையுடைய கரும்பானவர்களை வேதச் சமுத்திரமாகிய நபிகள்பெருமானவர்களுக்கு
அமுதம் போன்ற நாயகியான கதீஜா அவர்களைத் தரித்திருக்கும் கச்சிலடங்காது பொருந்தா நிற்கும்
முலைகளையுடைய மற்றும் பெண்கள் வரிசை வரிசையாக ஆசீர்வதித்துப் பூமியின்கண் செறிக்கப் பெற்ற
புஷ்பங்களின்மீது நடக்கச் செய்து முரசுடன் மற்றும் வாத்தியங்களும் ஒலிக்கும் வண்ணம் நாயகம்
தபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் பக்கத்தில் இரத்தின வர்க்கங்கழுத்திய
ஓராசனத்தின் மேல் இருக்கும்படி செய்தார்கள்.
1208. பொருவருங் கதிர்விட்
டெழும்பொருப் பிடத்திற்
பூத்தகொம்
பிருந்தது போன்றுந்
தெரிதரு மறிவின்
றருநிழ லுறைந்த
செழும்பொறைப்
பசுங்கிளி யெனவு
முருகவிழ் மலரிற்
றேன்றுளித் தெனவு
முகம்மதி
னிடத்தினிற் கதீசா
பரிவுட னிருப்ப
வமரருங் களிப்பச்
செல்வமும்
படர்ந்தெழுந் தனவே.
112
(இ-ள்) அப்போது
ஒப்பற்ற கிரணங்களை நானா பக்கங்களிலும் விட்டு ஓங்கா நிற்கும் மகாமேரு பருவதத்தினிடத்தில்
புஷ்பித்த மலர்க்கொம்பானது இருந்ததைப் போலவும், உணருமுணர்வாகிய மரத்தினது நிழலின்கண் தங்கிய
செழிய
|