முதற்பாகம்
பொறுமையான
பசிய கிளியைப் போலவும், வாசனை விரியா நின்ற புஷ்பத்தின்கண் மதுவானது துளித்ததைப்
போலவும், நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களிடத்தில் கதீஜாநாயகியவர்கள்
அன்போடு மிருக்கவும் தேவர்களான மலாயிக்கத்துமார்களும் பூலோகத்தின் கண்ணுள்ள மனுஷியர்களும்
மற்றும் பிராணிகளும் பலவிதச் செல்வங்களும் படர்ந்து எழும்பின.
1209.
இருகிளை யவருஞ் சம்மதித் தைந்நூ
றிரசித மகரெனப் பொருந்திக்
கருமுகிற் கவிகை முகம்மது
தமக்குங்
காரிகைக் கனங்குழை தமக்கு
மருமலர் தொடையல்
புனையுநிக் காகை
மணத்துடன் முடித்திடு மென்னப்
பெருகிய ஹாசிம் குலத்தவ
ரனைத்தும்
பிரியமுற் றுரைத்தன ரன்றே.
113
(இ-ள்) அப்போது மாப்பிள்ளையினது கிளையாரும் பெண்ணின் கிளையாருமாகிய இருவர்களும் மகர் ஐந்நூறு
வெள்ளியென்று சொல்லிச் சம்மதித்து மனப்பொருத்தமுற்றுக் கரிய மேகக்குடையையுடைய நபிமுகம்மது
முஸ்தபறாசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கும் காரிகையாகிய கதீஜாநாயகி யவர்களுக்கும்
பரிமளமமைந்த புஷ்பத்தினாலியன்ற மாலைசூடும் நிக்காகை மணத்தோடும் முடித்திடுங்களென்று பெருக்கமுற்ற
ஹாஷீங்குலத்தவர்க ளியாவர்களும் ஆசையுடன் சொன்னார்கள்.
1210.
முதியவ ருவந்து நீதிமுன்
மார்க்க
முறைப்படி சடங்குகண் முடிப்ப
மதிவலன் குவைலி
தகமகிழ்ந் தெழுந்து
முகம்மதின் செழுமணிக் கரத்திற்
புதுமதி வதனச்
செழுங்கொடிக் கதீசா
பொன்மலர்க் கரத்தினைச் சேர்த்திக்
கதிர்மதி யுளநாள்
வாழ்கவென் றிசைத்துக்
கண்களித் தினிதுவாழ்த் தினனே.
114
(இ-ள்) அவர்கள் அவ்வாறு சொல்ல அதைக் கேட்ட வயோதிபர்களான வேதாந்திகள் உவப்புற்று
நீதியையுடைய முன்மார்க்கமாகிய நபிஇபுறாகீ மலைகிஸ்ஸலாமவர்களின் மார்க்க முறைப்படி
சடங்குகளை நிறைவேற்ற அறிவினால் வல்லவனான குவைலிதென்பவன் மனமகிழ்ச்சி கொண்டெழும்பி
நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின்
|