முதற்பாகம்
செழுமையான அழகிய கையில்
புதிய சந்திரனை நிகர்த்த முகத்தையுடைய செழிய கொடிபோலும் கதீஜாநாயகி யவர்களின்
பொன்னினாலியன்ற புஷ்பத்தை யொத்த கையினைப் பொருத்திச் சூரியசந்திரனுள்ள நாள்மட்டிலும்
நீங்களும் வாழ்வீர்களாகவென்றுத் தனது வாயினாற் கூறி இருகண்களும் களிப்படைந்து இனிமையுடன்
ஆசீர்வதித்தான்.
1211.
செறிதரு மடவார்
குரவைக ளியம்பத்
திரளொடு
பல்லிய மார்ப்ப
வறிவினர் வாழ்த்த
வாணர்க ளேத்த
வந்தரத்
தமரர்கள் களிப்பக்
குறைவிலா துயர்ந்து
தழைத்தினி தோங்குங்
குலக்கதீ
சாவெனுங் கொடியு
மறைபடா தெழுந்த
மதிமு கம்மதுவு
மணவறை புகுந்தன
ரன்றே.
115
(இ-ள்) அப்போது
மறைவுபடாமல் எழும்பிய சந்திரனை நிகர்த்த நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களும் யாதொரு குறைவுமில்லாது உயர்ச்சியுற்றுத் தழைத்து இனிமையுடன் ஓங்கா நிற்கும் குலத்திற்
சிறந்த கதீஜாவென்று சொல்லும் கொடியானவர்களும் ஆங்கு நெருங்கிய பெண்களின் குரவைகள் சத்திக்கவும்
கூட்டத்தோடு வாத்தியங்கள் முழங்கவும், அறிவாளர்கள் ஆசீர்வதிக்கவும், கவிவாணர்கள் துதிக்கவும்,
ஆகாயத்தின்கண் தங்கிய தேவர்களான மலாயிக்கத்துமார்கள் சந்தோஷமடையவும், அங்கிருந்து மெழும்பி
மணவறையிற் போய்ப் புகுந்தார்கள்.
1212.
மணிகொழித் ததிருந்
திரைக்கட லனைய
மனமகிழ்
வொடுமுகம் மதுவும்
பணிபட ரவனித் திலதநா
யகியும்
பன்மலர்ப்
பளிக்கறை புகுந்து
கணிபடா வழகு கண்களிற்
பருகிக்
கருத்தென
வுயிருமொன் றாகி
யணிகிள ரின்பப்
பெருக்கெடுத் தெறியு
மாநந்தக்
கடற்குளித் தனரே.
116
(இ-ள்) முத்துக்களாகிய
மணிகளைக் கொழித்து ஒலியா நிற்கும் அலைகளை யுடைய சமுத்திரத்தைப் போன்ற மனமகிழ்ச்சியுடன்
நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் ஆதிசேடனது படாமகுடத்தின்கண் படரப் பெற்ற
இப்பூலோகத்திற்குத் திலதமான கதீஜாநாயகியவர்களும் அவ்வாறு பல புஷ்பங்களையுடைய பளிங்கினாற்
|