பக்கம் எண் :

சீறாப்புராணம்

466


New Page 3

முதற்பாகம்
 

செய்த மணவறையின்கண் நுழைந்து கணக்கற்ற ஒருவரின் அழகை யொருவர் தங்களின் கண்களினாலுண்டு இருவர்களின் கருத்தும் உயிருமொன்றாய் அழகோங்குகின்ற இன்பமாகிய பெருக்கை எடுத்து வீசாநிற்கும் ஆனந்தச் சமுத்திரத்தின்கண் மூழ்கினார்கள்.

 

1213. திண்டிறற் புவியின் முகம்மது தமக்குத்

         திருவய திருபத்தைந் தினின்மேற்

     கண்டதிங் களுமோ ரிரண்டுநா ளிரண்டிற்

          கனகநாட் டவர்கள்கண் களிப்ப

     வெண்டிசை முழுதுந் திருப்பெயர் விளங்க

          விருநில மணிக்கதீ சாவை

     வண்டுறை மரவச் செழுந்தொடை புனைந்து

           வரிசைமா மணம்பொருந் தினரே.

117

      (இ-ள்) திண்ணிய வலிமையையுடைய இப்பூலோகத்தின்கண் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்குத் தெய்வீகமுற்ற வயதானது இருபத்தைந்தின் மேல் காணப்பெற்ற ஒப்பற்ற இரண்டு மாதங்களோடு இரண்டு நாளிற் சுவர்க்கலோகத்தார்களான தேவர்கள் கண்களிக்கவும், எண்டிசைகள் முழுவதிலும் தங்களின் திருநாமமானது விளங்கவும், பெரிய இந்தப் பூலோகத்திற்கு இரத்தினமாகிய கதீஜாநாயகியவர்களைத் தேனீக்கள் தங்குகின்ற செழிய குங்குமமாலை சூட்டிச் சங்கைகொண்ட மகத்தான மணம் பொருந்தினார்கள்.

 

1214. அரவினை வதைத்த கரதல நயினார்

          அருங்கரம் பொருத்திய நயினார்

     பரல்செறி சுரத்திற் புனறரு நயினார்

          பணிபணிந் திடவரு நயினார்

     வரியளி யலம்பும் புயனபுல் காசீ

          மனத்துறை வரிசைநந் நயினார்

     தெரிமலர் கதீசா நாயகி நயினார்

          செல்வமுற் றினிதுவாழ்ந் திருந்தார்.

118

      (இ-ள்) அன்றியும், ஷாம்தேசத்திற்குச் செல்லுகின்ற பாதையின்கண் வைத்துச் சர்ப்பத்தை வதை செய்த கைத்தலத்தையுடைய ஆண்டவர்கள், மேலும் அற்றுப் போன அரியகைகளைப் பொருந்தச் செய்த ஆண்டவர்கள், பருக்கைக்கற்கள் மிகுத்த பாலை நிலத்தில் தண்ணீர் தந்த ஆண்டவர்கள், சர்ப்பமானது பணிந்திடும் வண்ணம் உதயமாகி வந்த ஆண்டவர்கள், வரிகள் படர்ந்த வண்டினங்கள் ஒலியா நிற்கும் மலர்மாலையணிந்த தோள்களையுடையவரான இந்நூலின் உதாரநாயகர் அபுல்காசீ மரைக்காய ரவர்களின் அகத்தின்கண்