|
முதற்பாகம்
(இ-ள்) அன்றியும், அறிவில்லாத முகம்மதென்று சொல்லப்பட்டவன் அதிகரித்த செருக்கினால் தனக்கு
ஆராயா நிற்கும் ஒரு வேதமிறங்கிற்றென்றும் முடிவற்றவனான ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவின்
கடைசியாகிய றசூலென்று சொல்லும் நபிப்பட்டம் எனக்கு உண்டுமென்றும் தெளிவடைந்த அறிஞர்களைப்
போலச் சொல்லிய சமாச்சாரத்தை நாம் தீர்க்காது அவன் உண்டாக்கிடும் கோட்டியென்று
சொல்லுவார்கள்.
1346.
பொறுத்துளத்
தடக்கிக் கண்டு போவது தகுவ தன்று
மறுத்துடைப்
பனபோன் மார்க்க வழிகெட நின்ற பேரைக்
கறுத்தகட் முரைக
டம்மான் மதமனங் கலங்கக் கூறிச்
செறுத்திவர்
தம்மைத் தண்டஞ் செய்விரா லொழியு மென்பார்.
7
(இ-ள்)
அன்றியும், நமது மார்க்கத்தினது முறைமைகள் அழியும் வண்ணம் நிற்கப் பெற்ற பேர்களான
இவர்களை நாம் பார்த்து இவர்களின் செய்கையைச் சகித்து மனசின்கண் அடங்கச் செய்து போவது
தகுவதல்ல, மறுக்களைத் துடைப்பட போலக் கோபித்த உறுதி வாக்கியங்களினால் இவர்களின்
மதத்தைக் கொண்ட மனமானது கலங்கும்படி சொல்லி வெறுத்து இவர்களைத் தண்டம்
செய்வீர்களேயானால் இச்செய்கைகள் ஒழிந்து போகுமென்று சொல்லுவார்கள்.
1347.
உரனுறு மனத்தி னூடு
முலைவிலாச் சமய நீங்கார்
பரகதி யடைவர்
வேறு படுத்திநல் லறத்தைத் தீய்த்தோர்
நரகமே யடைவ
ரென்ற நன்மறை வசனந் தன்னால்
விரகர்கள்
பகுத்துக் காட்டி விலக்கவுங் கலக்க நீங்கார்.
8
(இ-ள்)
அன்றியும், வலிமை பொருந்திய மனத்தினுள்ளும் உலைவற்ற மார்க்கத்தை யொழியாதவர்கள் மோட்ச
வாழ்வைப் பெறுவார்கள். அதை வேறாக்கி நல்ல புண்ணியத்தை நாசஞ் செய்தவர்கள்
நரகலோகத்தைப் பெறுவார்களென்று சொல்லிய நன்மை தங்கிய வேதவசனத்தினால்
புத்திசாலியானவர்கள் பிரித்துக்காட்டி விலகும்படி செய்தும் அவர்கள் அக்குழப்பத்தை விட்டும்
நீங்கிலர்கள்.
1348.
மனத்துறு வருமக்
காபிர் வலிபகை சிறிது மெண்ணா
தினத்துடன் கூடிச்
சஃதென் றிலங்குறு மலங்கன் மார்பன்
புனற்றடக் கரையி
லுள்ளப் புகழொடும் பொருவி லானை
நினைத்துலுச்
செய்து நீங்கா நெறிமுறை வணக்கஞ் செய்தார்.
|