|
முதற்பாகம்
(இ-ள்)
அப்போது சஃதென்று பிரகாசியா நிற்கும் மலர் மாலையணிந்த மார்பையுடையவர்கள் தங்களின்
இனத்தவர்களோடும் சேர்ந்து மனதின்கண் பொருந்திய வைராக்கியத்தையுடைய காபிர்களின்
வலிமையான விரோதத்தைக் கொஞ்சமும் நினையாது விசாலமாகிய ஒரு தண்ணீர்க் கரையில்
மனப்புகழ்ச்சியுடன் ஒப்பற்றவனான ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவை உன்னி உலுச் செய்து மாறாத
சன்மார்க்க ஒழுங்கைக் கொண்ட தொழுகையைத் தொழுதார்கள்.
1349.
வணக்கமுற்
றிருந்த சஃது மன்னவன் றன்னை நோக்கி
யிணக்கியிவ்
விடரைத் தீர்ப்போ மிவர்க்கென வுரைப்பர் பின்னும்
பிணக்கெனுஞ் சமய
பேதப் பேய்பிடித் தவர்க்கு நீதிக்
கணக்கறி வுறுமோ
வென்னக் காபிர்கள் கடுத்து நின்றார்.
10
(இ-ள்)
அவ்வாறு தொழுது கொண்டிருந்த மன்னவரான சகுதுறலியல்லாகு அன்கு அவர்களைக் காபிர்கள் பார்த்து
இவரை இணங்கச் செய்து இவரினது இந்தத் துன்பத்தை நீக்குவோமென்று சொல்லுவார்கள். பின்னரும்
பிணக்கென்று சொல்லும் மாறுபாடான மதப்பேய் பிடித்தவர்களுக்கு நீதியின் காரியமாகிய அறிவுகள்
பொருந்துமா பொருந்தாதென்று மனங்கொதித்து நிற்பார்கள்.
1350.
சீற்றமுங் கடுப்பு
மாறாச் சினத்தொடுங் காபிர் கூடி
மாற்றலர்
போலச் சூழ்ந்து மன்னவர் சகுதை நோக்கித்
தேற்றுறு
முதியோர் முன்செய் செயலினைச் செய்ய லன்றி
வேற்றழ லூழல்
புக்க தொழிலினை விருப்ப முற்றீர்.
11
(இ-ள்)
அவ்விதம் நின்ற சீற்றமும் கொதிப்பும் நீங்காத அந்தக் காபிர்கள் ஒன்றுசேர்ந்து
சத்துராதிகளைப் போல வளைந்து அரசரான சஃது றலியல்லாகு அன்கு அவர்களைப் பார்த்துத்
தொளிவையடைந்த நமது முதியவர்கள் முன்னர் இயற்றிய தொழிலை இயற்றுதலல்லாது வேற்றுமை கொண்ட
அக்கினியையுடைய நரகத்திற் புகுதாநிற்கும் அந்தத் தொழிலை மனசின்கண் இச்சித்தீர்.
1351.
வருநெறி
பிழைத்தீர் கஃபா வலஞ்செய்து குபலைப் போற்றுந்
திருநெறி
விடுத்தீர் செய்யாத் தீவினை விளைத்தீர் வீணி
பொருநெறி
தொடுத்தீர் நும்மோ டுற்றவர்க் கெல்லா நந்தங்
குருநெறி
தவிர்த்தீர் கொள்ளாக் கொடும்பவம் விளைத்துங் கொண்டீர்.
12
(இ-ள்)
அன்றியும், நாம் நடத்தி வரும் சன்மார்க்கத்தில் தவறினீர். தேவாலயமாகிய கஃபாவைப்
பிரதட்சணஞ் செய்து
|