பக்கம் எண் :

சீறாப்புராணம்

519


முதற்பாகம்
 

எதிர்த்த காபிர்களின் கூட்டத்தையும் அரசரான சகுது றலியல்லாகு அன்கு அவர்களின் கூட்டத்தையும் வேறாக்கி இவ்விரு கூட்டத்தார்களுக்கும் பொருந்திய வார்த்தைகளைச் சொல்லி மனசின் கண்ணுள்ள கோபத்தைத் தணித்து வீட்டின்கண் போய்ப் புகுதும்படி செய்தார்கள்.

 

1358. உதித்தமுன் முதன்மை யாக பீசபீ லுதிரங் காட்டி

     மதித்தவீ ரியத்தின் செவ்வி மன்னவர் சகுதும் புக்கார்

     கொதித்தபுன் மனத்தி னோடுங் குறுகலர் மனையிற் சார்ந்தார்

     பதித்தவே ரூன்றித் தீனும் படர்கொழுந் தோங்கிற் றன்றே.

19

      (இ-ள்) முதன் முதலாக தோற்றிய பீசபீலென்னும் பாதையில் இரத்தத்தைக் காட்டி மதிக்கப் பெற்ற வீரியத்தையுடைய அழகிய அரசரான சகுது றலியல்லாகு அன்கு அவர்களும் அவ்வாறு வீட்டின்கண் போய்ச் சேர்ந்தார்கள். கொதிப்படைந்த கீழ்மையாகிய மனசினுடன் சத்துராதியான காபிர்களும் தங்களின் வீட்டின்கண் போய்ச் சேர்ந்தார்கள். தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கமாகிய மரமும் பதிதலுற்ற வேர்களை யூன்றி விரியாநின்ற கொழுந்துகளை விட்டு வளர்ந்தது.

 

கலிநிலைத் துறை

 

1359. தூத ராகிய முகம்மது மவர்க்குறுஞ் சுருதி

     யோது நன்னெறி யுடையரு மினத்துட னுறைந்து

     தீது றுங்கொடுங் காபிர்கள் செயலினைச் சிதைப்ப

     வேத நன்மொழிப் பொருளொடுந் தீனிலை விரித்தார்.

20

      (இ-ள்) அப்போது அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் தூதராகிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் அவர்களுக்குப் பொருந்தா நிற்கும் புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தையோதும் நல்ல சன்மார்க்கத்தையுடையவர்களும் தங்களினது கூட்டத்தோடும் தங்கியிருந்து தீமையுற்ற கொடிய காபிர்களின் செயலைச் சிதைக்கும் வண்ணம் வேதத்தினது நன்மை பொருந்திய வார்த்தைகளின் பொருளுடன் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்க நிலைமையை விரியச் செய்தார்கள்.

 

1360. கோத றுந்துகில் பொதிந்தரு மணிபல குயிற்றி

     யோது நன்மொழி யொடுமிரு கரங்குவித் தொதுங்கிப்

     பேத முள்ளற வணங்குமிப் பேயினா லுமக்குப்

     பாத கம்பலித் திடுநிச மெனப்பழித் தனரே.

21

      (இ-ள்) அன்றியும், குற்றமற்ற வஸ்திரத்தினால் மூடி அரிய இரத்தினங்களை அனேகமாய்ப் பதித்து ஓதா நிற்கும் நல்ல