|
முதற்பாகம்
(இ-ள்)
அன்றியும், நாம் அனைவர்களும் முன்னர் நடந்து வந்த மார்க்கமானது குற்றமென்று கூறி நமது
ஆலயமாகிய கஃபாவினுள் தேவதங்களை வணங்கும்படி போய்ச் சேர்ந்த ஜனங்க ளெல்லாவரையும்
வழிகேடர்க ளென்று சொல்லி வேதநூற்க ளெல்லாவற்றையுங் கற்றுத் தாண்டிய பெரியவர்களினது இரு
காதுகளும் கசக்கும்படி பின்பற்றிப் பேசுவதை வெறுக்காது அடிக்கடி ஆரம்பித்தான்.
1368.
தந்தை
தாய்தமர்க் குறும்பொருட் சமயநிண் ணயத்தை
நிந்தை
செய்தனன் றனக்குறும் வடுவென நினையான்
சிந்தை யுற்றதே
துணிந்தனன் பிறர்மொழி தேறா
னிந்த வாறலால்
வேறொரு கருமமு மிசையான்.
29
(இ-ள்)
அன்றியும், பிதா மாதா பந்துக்களாகிய இவர்களுக்குப் பொருந்திய பொருளான மார்க்க நியமங்களை
வெறுத்தான். அவ்விதம் வெறுப்பதைத் தனக்கும் பொருந்தும் குற்றமென்று எண்ணிலன். மனசின்கண்
சார்ந்ததையே துணிந்தான். அன்னியருடைய வார்த்தைகளைக் கேட்டுந் தெளிந்திலன். எப்போதும்
இந்த வழியேயல்லாமல் வேறே யொரு காரியத்தையும் பேசிலன்.
1369.
நின்னை
நோக்கியு நின்குல முறைப்பெரி யவர்நேர்
தன்னை
நோக்கியும் பொறுத்தனந் தணிந்தன மிவனை
யுன்னி
நோக்கியே வணக்கிடு முமதுசொற் கடந்தாற்
பின்னை
நோக்குமெந் திறமெனப் பேசின ரன்றே.
30
(இ-ள்)
ஆதலால் நாங்கள் உங்களைப் பார்த்தும் உங்கள் குடும்பத்தின் சத்திய முறைமையை யுடைய
பெரியவர்களைப் பார்த்தும் அந்த முகம்மதின் துஷ்டத்தனத்தைச் சகித்தோம். மேலும் தணிந்துக்
கொண்டோம். ஆனால் நீங்கள் மனசின்கண் யோசித்து இந்த முகம்மதைப் பார்த்து
வணக்கிடுங்கள். அப்படி வணக்குவதில் அவன் உங்களது வார்த்தைகளைத் தாண்டினால் பிற்பாடு
பாருங்கள், எங்கள் திறத்தை என்று சொன்னார்கள்.
1370.
முறைமு றைப்படி
காபிர்கள் கூறிய மொழிகேட்
டறம தித்தநெஞ்
சுடைந்தபித் தாலிபங் கவர்கட்
குறும னக்குறை
தவிர்ந்திட நன்மொழி யுரைப்பப்
பொறைம னத்தொடு
மனைவரு மனைவயிற் போனார்.
31
(இ-ள்)
அவ்வாறு அந்தக் காபிர்கள் வரிசை வரிசையான விதத்தில் கூறிய வார்த்தைகளை
அபீத்தாலிபவர்கள் தங்களின் காதுகளினால் கேள்வியுற்றுத் தருமத்தையே கருதிய மனமானது தகர்ந்து
அவ்விடத்துற்ற அந்தக் காபிர்களுக்குப் பொருந்திய
|