பக்கம் எண் :

சீறாப்புராணம்

525


முதற்பாகம்
 

      (இ-ள்) அவ்விதம் யாவர்களும் இணங்கிச் சொன்னவைகள் நல்லதென்று தங்கள் கூட்டத்துடன் பல ஜனங்களும் விரைவாயெழும்பி அபீத்தாலி பவர்களின் திருச்சமூகத்தில் வந்து சேர்ந்துத் திசைகளினது பாதைகளிலும் திக்குகளிலும் திரியா நிற்கும் வேகத்தைக் கொண்ட புறமயிரமைந்த பெருமை பொருந்திய குதிரையை யுடைய குரிசிலான அவ் வபீத்தாலி பவர்களின் முன்னர் சொல்ல நியமித்தார்கள்.

 

1378. குரிசி னங்குல மகன் முகம் மதுசெயுங் குறும்பைப்

     பரிவி னிற்பொறுத் திருந்துநும் மிருசெவிப் படுத்தித்

     தெரிய வேண்டுவ திலையினிச் சேர்தரு மினத்துக்

     குரிய ரியாமல வறிகவென் றுரைத்தயல் போனார்.

39

      (இ-ள்) குரிசிலாகிய அபீத்தாலிபானவர்களே! நமது கூட்டத்திலுற்ற புதல்வனான முகம்ம தென்பவன் செய்யும் குறும்புத் தனத்தை நாங்கள் அன்போடு சகித்திருந்தும் இனிமேல் உங்களுடைய இரு காதுகளிற் படுத்தியறிய வேண்டுவது யாதொன்றுமில்லை. நாங்கள் கூடா நிற்கும் நமது இனத்திற்குச் சொந்தமானவர்கள் அல்லேம். நீங்கள் அறிவீர்களாக வென்று சொல்லி அப்புறம் போயினார்கள்.

 

1379. உற்ற தங்குலப் பெரியவ ரனைவரு முரைத்த

     பெற்றி யுமகன் குறிப்பையும் பிரித்தெடுத் தாய்ந்து

     வெற்றி வாளபித் தாலிபு மனமிடை மிடைந்திட்

     டுற்ற தங்கருத் தொடுமயற் குரைத்திடா துறைந்தார்.

40

      (இ-ள்) வெற்றியமைந்த வாளாயுதத்தை யுடைய அபீத்தாலிபவர்கள் அவ்வாறு வந்து பொருந்திய தங்களின் குலத்தினது பெரியவர்களெல்லாவரும் சொல்லிய தன்மையையும் தங்களின் புதல்வரான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் குறிப்பையும் வேறுபடுத்தி மனசின்கண் எடுத்தாராய்ந்து மனமானது மிகவும் மிடைந்துப் பொருந்திய தங்கள் கருத்துடன் பக்கத்தார்களுக்குச் சொல்லாது தங்கியிருந்தார்கள்.

 

1380. பத்தி விட்டினம் வெறுப்பதும் பழுதுயிர்த் துணைவன்

     புத்தி ரர்கிகிடர் வருவதும் பழுதெனப் புழுங்கி

     யெய்த்த சிந்தையோ டியனபி தமையழைத் திருத்தி

     வைத்து நன்னய மொழிசில வகுத்தெடுத் துரைத்தார்.

41

      (இ-ள்) அவ்வாறு இருந்த அபீத்தாலி பவர்கள் அன்பான தொழியப் பெற்றுப் பந்துக்களைப் பகைப்பதும் குற்றம் நமது ஜீவனைநிகர்த்த சகோதரராகிய அப்துல்லா வென்பவரின்