|
முதற்பாகம்
புதல்வரான
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்குத் துன்பம் வந்து சேருவதுங் குற்றமென்று
புழுக்கமுற்று மெலிந்த சிந்தையோடு ஒழுங்கை யுடைய நபிகள் பெருமானவர்களைக் கூப்பிட்டு
இருக்கவைத்து நல்ல நயத்தையுடைய சில வார்த்தைகளை வகைப்படுத்தி எடுத்துச் சொன்னார்கள்.
1381.
வருத்த முற்றபித்
தாலிபங் குரைத்திடு வசனந்
திருத்துந்
தீனிலை முகம்மது செவியிடைப் புகுந்து
கருத்தி
னிற்றெளிந் தெண்ணிய நல்வினைக் கருமம்
பெருத்து தற்கிட
ரிதுகொலென் றகத்திடைப் பொறுத்தார்.
42
(இ-ள்)
அபீத்தாலி பவர்கள் அவ்விதம் துன்பமுற்று அவ்விடத்தில் சொல்லிய வார்த்தைகள் செவ்வைப்
படுத்தா நிற்கும் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்க நிலைமையை யுடைய நாயகம் நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினது காதுகளின்கண் நுழைந்துச் சிந்தையில் தேர்ந்து நாம்
நினைத்த நல்ல செயலையுடைய காரியத்தை பொருந்தச் செய்வதற்கு இச்சமாச்சாரம் இடரானதென்று
மனசின்கண் தரித்தார்கள்.
1382.
வந்து ரைத்ததம்
மினத்தவர் மனவெறுப் பகல
நந்த மைச்சிறி
திகழ்வரென் றகத்தினி னாட்டித்
தந்தை தந்திரு
முகமலர் தனையெதிர் நோக்கிச்
சிந்து முத்தவெண்
ணகையித ழமுதவாய் திறந்தார்.
43
(இ-ள்)
அவ்வாறு தரித்த நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் சமூகத்தில்
வந்து சொன்ன பந்துக்களின் மனவிரோதமானது நீங்கும் வண்ணம் நம்மைக் கொஞ்சம்
இகழ்வார்களென்று மனசின்கண் ஸ்தாபித்துத் தங்களின் பெரிய பிதாவான அபீத்தாலி பவர்களின்
அழகிய முகமாகிய தாமரை மலரை எதிராய்ப் பார்த்துச் சிந்தா நிற்கும் முத்தைப் போன்ற
வெண்ணிறத்தைக் கொண்ட பற்களையுடைய அதரங்களை யுற்ற அமுதவாயைத் திறந்தார்கள்.
1383.
பருதி
யைக்கொணர்ந் தணிவலக் கரத்திடை பதித்து
மரிதி னிற்சசி
கொணர்ந்திடக் கரத்தினி லமைத்து
மொருமொ ழிப்பட
வினத்தவ ரொருங்குற நெருங்கிப்
பொருத டக்கினு
நும்மனம் பொருந்திலா திருந்தும்.
44
(இ-ள்) நமது
இனத்தவர்களாகிய அறபிகள் அரிதாகச் சூரியனைக் கொண்டு வந்து அழகிய வலதுகையி னிடத்தில்
வைத்தும் சந்திரனைக் கொண்டு வந்து இடதுகையின்கண் அமையப் பண்ணினாலும் ஒரு சொற்படும்
வண்ணம்
|