|
முதற்பாகம்
சேர்மானமாகச்
செறிந்து சண்டை செய்து என்னை அடக்கினாலும் உங்களுடைய உள்ளமானது பொருந்தா திருந்தாலும்.
1384.
ஈத லாற்சில
விடரெனை யடுக்கினு மிறையோன்
றூத னியானெனச்
சுருதியை விளக்குவ தலது
பேதி யாதென
தகமென முகம்மது பிரியாத்
தாதை யோடுரைத்
தனரிரு விழிமழை தயங்க.
45
(இ-ள்)
இதல்லாமல் சில இடைஞ்சல்கள் என்னை அடுத்தாலும் இறையவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின்
றசூல் நானென்று வேதத்தை விளக்குவதே யல்லாமல் எனது மனமானது பேதப்படாதென்று நாயகம்
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இரண்டு கண்களிலும் மிருந்துண்டாகும் நீரானது
பிரகாசிக்கும்படி நீங்காத தங்களின் பெரிய தந்தையாகிய அபீத்தாலிபவர்களோடும்
சொன்னார்கள்.
1385.
அழுது ரைத்தநன் னெறிமுகம் மதுதமை யடுத்துத்
தழுவி யென்னுயிர்
நீயல திலையெனச் சாற்றி
முழுது நின்கருத்
துறும்படி முயல்வதே யன்றிப்
பழுதி லென்மனத்
திதுகொனிண் ணயமெனப் பகர்ந்தார்.
46
(இ-ள்)
அவ்வாறு அழுது சொன்ன நல்ல சன்மார்க்கத்தையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை
அபீத்தாலிபவர்கள் நெருங்கிக் கட்டியணைத்து எனது ஜீவனானது நீரேயல்லாது வேறில்லையென்று
சொல்லி முழுவதும் உம்முடைய எண்ணமானது பொருந்தும் வண்ணம் முயற்சிப்பதேயன்றி எனது மனசின்கண்
யாதொரு பொல்லாங்குமில்லை. இஃது சத்தியமென்று சொன்னார்கள்.
1386.
சிதைவி லாமொழி
தனையபித் தாலிபு தெளிப்ப
மதலை யாகிய
முகம்மது மனத்திடை களித்துப்
புதிய னாயகன்
ஆரணம் புடைபரந் தோங்க
விதுவி னொண்கலை
வளர்த்தெனத் தீன்பயிர் விளைத்தார்.
47
(இ-ள்)
அபீத்தாலி பவர்கள் அவ்விதம் கேடற்ற வார்த்தைகளைத் தெரிவிக்கப் புதல்வரான நாயகம்
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் மனசின்கண் சந்தோஷித்துப் புதிய
ஆலத்தையுடைய நாயகனான ஜல்லஜலாலகுவத்த ஆலாவின் வேதமானது பக்கங்களில் பரவி வளரும் வண்ணம்
சந்திரனின் ஒள்ளிய கிரணங்கள் வளர்வதைப் போலத் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கப்பயிரை
விளையச் செய்தார்கள்.
|