பக்கம் எண் :

சீறாப்புராணம்

532


முதற்பாகம்
 

1402. கேட்டு வந்தவ ருஞ்சிலர் கேட்டினை

     மூட்ட வந்தவ ருஞ்சிலர் மூள்பகை

     வீட்டு மென்று வெகுண்டவ ருஞ்சிலர்

     கூட்ட மிட்டுக் குலத்தொடுங் கூடினார்.

63

      (இ-ள்) அவ்வாறு கூட்டவே அச் சமாச்சாரத்தைக் காதுகளினால் கேள்வியுற்று வந்து சேர்ந்த பேர்களும் சிலர். பொல்லாங்கை மூட்டுதற்காய் வந்து சேர்ந்த பேர்களும் சிலர். மூளா நிற்கும் விரோதத்தையுடைய சத்துராதிகளைக் கொலை செய்யுங்களென்று கோபித்த பேர்களும் சிலராகிய இவர்கள் யாவர்களும் கூட்டமிட்டுத் தங்களின் குலத்தோடும் திரண்டார்கள்.

 

1403. வடித்த மெய்ம்மறை நந்நபி வாக்கினிற்

     படித்த சொல்லைப் பகர்ந்திடும் பேர்களைப்

     பிடித்த டித்துப் பெலன்குறைத் தில்லமு

     மிடித்து டைத்திடை யூறு படுத்தினார்.

64

      (இ-ள்) அவ்விதம் திரண்ட யாவர்களும் வடிக்கப்பெற்ற சத்தியத்தைக் கொண்ட புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தையுடைய நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் வாக்கினாலோதிய வார்த்தைகளைச் சொல்லா நிற்கும் ஜனங்களைப் பிடித்து அடித்து அவர்களின் வலிமையையுங் குறையும்படி செய்து வீடுகளையும் இடித்துத் தகர்த்து ஊறுபாடு படுத்தினார்கள்.

 

1404. செறுநர் செய்திடுந் தீயவக் கோட்டிகண்

     டறிவு றுமபித் தாலிபு மங்கவர்க்

     கிறுதி செய்குவ னியானென வீரமுற்

     றுறைபெ ருங்குலஞ் சேர்ப்பதற் குன்னினார்.

65

      (இ-ள்) சத்துராதிகளான அந்தக் காபிர்கள் அவ்வாறு செய்யா நிற்கும் கொடிய துன்பங்களை அறிவானது மிகுக்கப் பெற்ற அபீத்தாலிபவர்களும் தங்களின் கண்களினாற் பார்த்து அக்காபிர்களுக்கு யான் முடிவு செய்வேனென்று சொல்லி வீரமடைந்து அங்கு தங்கா நிற்கும் பெரிய கூட்டத்தைக் கூட்டுவதற்காய்த் தங்களின் மனசிலெண்ண முற்றார்கள்.

 

1405. பெருகி நின்ற தலைமுறைப் பேரராய்

     வருமவ் வப்துல் முனாபுதன் மக்களி

     லுரிய வாசி மெனுங்கிளை யோரையும்

     பொருவின் முத்தலி புக்கிளை யாரையும்.

66

      (இ-ள்) அவ்விதமெண்ணிய அபீத்தாலி பவர்கள் தங்களின் தலைமுறைப் பேரராக வந்த அந்த அப்துல் முனாபு