பக்கம் எண் :

சீறாப்புராணம்

533


முதற்பாகம்
 

என்பவர்களினது புதல்வர்களில் அதிகரித்து நின்ற சொந்தமான ஹாஷீமென்று சொல்லும் கிளையார்களையும், ஒப்பற்ற முத்தலிபுக் கிளையார்களையும்.

 

1406. தனத்த அப்து சமுசுக் கிளையையுஞ்

     சினத்த வேல்நவு பல்கிளைச் சேனையுங்

     கனத்த வெண்டிரை மாகடற் கொப்பென

     மனைத்த லத்தில் வரவழைத் தாரரோ.
                                                       
   67

      (இ-ள்) செல்வத்தை யுடைய அப்துஷ்ஷம்சுக் கிளையார்களையும், சத்துராதிகளின் மீது கோபிக்கின்ற வேற்படையையுடைய கூட்டமாகிய நௌபல் கிளையார்களையும், பாரமான வெள்ளிய அலைகளையுடைய பெரிய சமுத்திரத்திற்கு நிகரென்று சொல்லும் வண்ணம் தங்களினது வீட்டின்கண் வரும்படி கூப்பிட்டார்கள்.

 

1407. முன்றி லெங்கணு மொய்த்தசெவ் வேற்கர

     வென்றி வீரரை நோக்கி விளித்தணி

     மன்றன் மார்பின் முகம்மது வான்முனஞ்

     சென்ற செய்தி யனைத்தையுஞ் செப்பினார்.

                                                          68

      (இ-ள்) அபீத்தாலி பவர்கள் அவ்வாறு கூப்பிட வந்து முற்றத்தில் எவ்விடங்களிலும் நெருங்கிய சிவந்த வேலாயுதந் தாங்கிய கையினது வெற்றியை யுடைய அவ்வீரர்களைப் பார்த்துக் கூப்பிட்டு அழகிய வாசனை யமைந்த மார்பையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் மகத்துவமுற்ற எதிரில் நடந்த சமாச்சாரங்க ளெல்லாவற்றையுஞ் சொன்னார்கள்.

 

1408. மாறி லாதெழின் மான்மதங் காவத

     நாறு மேனி முகம்மதை நாடொறும்

     வேறு பாடு விளைத்திடும் பேர்களைக்

     கோற லென்குறிப் பென்னவுங் கூறினார்.
                                                         
69

      (இ-ள்) அன்றியும், அழகிய கஸ்தூரி வாசனையானது காதவழித்தூரம் நீங்காது பரிமளியா நிற்கும் திருமேனியை யுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்குப் பிரதி தினமும் விகற்பத்தைச் செய்யும் ஜனங்களைக் கொல்லுவதே எனது மனசிலுள்ள குறிப்பென்றும் சொன்னார்கள்.

 

1409. ஆட்டி றத்தபித் தாலி புரைத்தசொற்

     கேட்டு முத்தலி புக்கிளை யோர்களுங்

     கூட்டத் தாசீங் குலப்பெரி யோர்களு

     நாட்ட முற்றிது நன்றெனக் கூடினார்.

                                                            70