|
முதற்பாகம்
1413.
பகைத்த
காபிர்கள் கூடிப் பனைக்கைமா
வுகைத்த வீர
னொலீதிடம் புக்கிநா
மிகைத்த
கச்சின் முகம்மதின் வீரத்தைத்
தகைத்தல்
வேண்டுவ துண்டெனச் சாற்றுவார்.
74
(இ-ள்)
அந்நேரத்தில் விரோதித்த அந்தக் காபிர்கள் ஒன்று சேர்ந்துப் பனைமரம் போன்ற
தும்பிக்கையுடைய யானைகளை நடத்தா நிற்கும் வீரனாகிய ஒலீதென்பவனிடத்தில் போய் நாம்
ஹஜ்ஜிப் பெருநாளில் அந்த முகம்மதென்பவனின் அதிகரித்த வீரத்தைத் தடுக்க வேண்டுவது
ஒன்றுண்டுமென்று சொல்லுவார்கள்.
1414.
கணிதன் றுன்பக்
கவியன் கபடித
வணிதன் வஞ்சனை
யன்வரை வற்றபித்
தணித னென்றொரு
பேரையுண் டாக்குத
றுணித னன்றென
யாவருஞ் சொல்லினார்.
75
(இ-ள்) அந்த
முகம்மதென்பவன் சோசியன். அன்றியும், துன்பத்தையுடைய பாட்டுகளைப் பாடப்பட்டவன். தந்திர
வார்த்தைகளினது இணக்கத்தையுடையவன். வஞ்சனையையுடையவன். எல்லையில்லாத பித்தமானது
நெருங்கியவன் என்று சொல்லி ஒரு நாமத்தைச் சிருட்டிக்க நாமனைவர்களும் முயலுவது நல்லதென்று
யாவர்களும் சொன்னார்கள்.
1415.
நீட்டு கைக்கரி
யைநிக ரிற்புலி
காட்டு மாறென
மாறிடுங் காபிர்கண்
மாட்டி ருந்து
வழங்கிய மாற்றத்தைக்
கேட்டி ருந்த
வொலீது கிளத்துவான்.
76
(இ-ள்)
நீட்டா நிற்கும் துதிக்கையையுடைய யானைக்கு ஒப்பாகப் பூனையைக் காட்டுகின்ற மார்க்கத்தைப்
போல நன்னெறியை விட்டும் நீங்கிய காபிர்களான அவர்கள் தன்னிடத்திலிருந்து சொல்லிய
வார்த்தைகளை இரு காதுகளினாலுங் கேள்வியுற்றிருந்த ஒலீதென்பவன் சொல்லுவான்.
1416.
ஈதெ லாம்பெய
ரன்றிவன் சொல்லினைக்
கோத டர்த்தக்
குறிப்பரி தாற்குலம்
பேத கப்படுத்
தும்பெரு வஞ்சனைச்
சூத னென்றிடும்
பேரெனச் சொல்லினான்.
77
(இ-ள்)
இஃதனைத்தும் நாமமல்ல, இந்த முகம்மதின் குற்றத்தை யடர்த்தா நிற்கும் அந்த வார்த்தைகளைக்
குறிக்க அருமையானதினால் தனது குலத்தை மாறுபாடுபடுத்தும் பெரிய
|