|
முதற்பாகம்
வஞ்சனையையுடைய
வஞ்சகமென்று சொல்லும் நாமமென்று சொல்லினான்.
1417.
இத்த லத்தினி லிவ்வரு டத்தினின்
மொய்த்த கச்சின்மு கம்மதை
வஞ்சனைப்
பித்த னென்று பெரும்பெயர்
நாட்டுதல்
புத்தி யென்றித மித்தனர்
பொய்மையோர்.
78
(இ-ள்)
அதைக் கேட்ட பொய்மையை யுடையவர்களான அந்தக் காபிர்களனைவர்களும் இந்தத் திருமக்கமா
நகரத்தின்கண் இவ்வருஷத்தில் நெருங்கிய ஹஜ்ஜிப் பெருநாளில் முகம்மதென்பவனை வஞ்சனையையுடைய
பித்தனென்று பெரிய நாமத்தை நிறுத்துவது அறிவென்று சொல்லி ஒருமித்தார்கள்.
1418.
மக்க மாநகர்
வந்தவர் தம்மிடம்
புக்கி ருந்தமு
கம்மதின் புத்திகேட்
டொக்க
லோடுமிவ் வூரிழந் தொவ்வொரு
திக்கி னில்லடை
வார்சிலர் காணென்பார்.
79
(இ-ள்)
அவ்வாறு ஒருமித்த யாவர்களும் ஹஜ்ஜிப் பெருநாளுக்காக பெருமை பொருந்திய அந்த மக்காப் பதிக்கு
வந்தவர்களிடத்திற் போய் இருந்து சில ஜனங்கள் முகம்மதென்பவனின் அறிவைக்கேட்டுத்
தங்களின் பந்துக்களோடும் இந்தத் திருமக்கமா நகரத்தையிழக்கப் பெற்று ஒவ்வொரு
திக்குகளிலும் போய்ச் சேருவார்களென்று சொல்லுவார்கள்.
1419.
தாயைத்
தந்தையைத் தன்னுயி ராகிய
சேயைப்
பெண்டிரைச் சிந்தையில் வேறதாய்
பாயத் தோடும்
பகைப்பிக்க வல்லதோர்
மாயக் காரன்மு
கம்மதென் றோதுவார்.
80
(இ-ள்)
அன்றியும், அந்த முகம்மதென்பவன் மாதாவையும் பிதாவையும் தனது ஜீவனான மக்களையும் மனைவியையும்
மனசின்கண் வேறாக உபாயத்துடன் பகைப்பிக்கும் வண்ணம் வல்லதான ஒப்பற்ற மாயத்தை
யுடையவனென்று சொல்லுவார்கள்.
1420.
ஆதி வேறுண் டொருவனென் பானவன்
றூத னியானெனச்
சொல்லுவன் றெய்வங்கள்
பேத கப்படப்
பேசுவன் பேதியா
வேத மொன்று
விளைந்தது காணென்பான்.
81
(இ-ள்)
அன்றியும், முதன்மையனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலா ஒருவன் வேறே யுண்டுமென்று
|