பக்கம் எண் :

சீறாப்புராணம்

538


முதற்பாகம்
 

1423. மாசி லாவரிசை முகம்ம தின்பெயரை

          மாற்றி வஞ்சகனெ னும்பெயர்

     பேசி யூரவரி ரண்டு பட்டவுரை

          பெருகி யெங்கணும றிந்துபொன்

     னூச லாடுதெரு வீதி மாமதின

          முற்ற மன்னரு மறிந்துமா

     பூச லாகுவ தினத்தி னுக்கிது

          பொருந்து மோவென வருந்தினார்.

84

      (இ-ள்) அன்றியும், குற்றமற்ற சங்கையையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் திருநாமத்தை யொழித்து வஞ்சகனென்று சொல்லும் நாமத்தைச் சொல்லி அந்த மக்கமா நகரத்தை யுடையவர்கள் இரண்டு பட்ட வர்த்தமானமானது அதிகரித்து எல்லாவிடங்களிலும் தெரிந்து பொன்னினாலான ஊஞ்சல்களாடா நிற்கும் தெருவினது வீதிகளையுடைய பெருமை பொருந்திய மதீனா நகரத்தின்கண் தங்கிய அரசர்களும் அறிந்து பெரிய கலகமாகுவதான இஃது பந்துக்களுக்குப் பொருந்துமா? பொருந்தாதென்று சொல்லித் துன்பமடைந்தார்கள்.

 

1424. மதின மாநக ரவர்க்கு மக்கநக

          ருற்ற மன்னவர் தமக்குமோ

     ருதர பேதமஃ தன்றி யாவியுட

          லொத்திருப் பவர்க ளாகையால்

     விதியி னுட்பமறை கற்ற வன்புகழின்

          மிக்க னானஅபு கைசவன்

     பதிவு பாசுரமொ டுறைய நீதிமுறை

          பழுதி லாதபடி யெழுதினான்.

85

      (இ-ள்) அன்றியும், பெருமை தங்கிய மதீனா நகரத்திற் பொருந்திய அரசர்களுக்கும் மக்க நகரத்திற் பொருந்திய அரசர்களுக்கும் உதரபேதமே யல்லாமல் ஒப்பற்ற ஜீவனுந் தேகமும் ஒத்திருப்பவர்களாகையினால் அறிவினது சூட்சத்தையுடைய வேதங்களைப் படித்தவனும் கீர்த்தியில் மிகுந்தவனுமாகிய அபூகைசென்பவன் பதிவையுடைய வசனங்களுடன் நீதியினது ஒழுங்குகள் தங்கும்படி குற்றமில்லாத வண்ணம் ஒரு நிருபத்தைத் திருமக்கமா நகரத்தார்களுக்கு எழுதினான்.

 

1425. ஓலை யுத்தரமு கம்ம தைக்கொடு

          முரைத்த நிந்தைபழு தென்னவுஞ்

     சீல மற்றபகை யொருவ ருக்கொருவர்

          செய்து கோடல்பழு தென்னவு