பக்கம் எண் :

சீறாப்புராணம்

540


முதற்பாகம்
 

      (இ-ள்) இந்தப்படி விரோதமான அந்தக் காபிர்கள் இடராக இருக்கவும், நாயகம் நபிமுகம்மது சல்லால்லாகு அலைகிவசல்ல மவர்கள் நினையா நிற்கும் நல்ல சன்மார்க்கத்தை நிலையாக நாட்டுவேனென்று சொல்லும் இருதயத்துடன் தடுமாற்றமடையாது அன்னப்பட்சி போலும் நடையையுடைய பெண்களுக்கும் புருஷர்களுக்கும் மற்றவர்களுக்கும் துன்பமற்ற தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தினது ஒழுங்கான பாதையைத் தளராது மேலுறும் வண்ணம் விளக்கிக் காட்டினார்கள்.

 

1428. சிந்து ரத்திர ளடர்த்து நின்றதொரு

          சிங்க வேறெனு முகம்மது

     தந்தி ரத்தையு மவன்ற னேர்வழி

          தனக்கி சைந்தவர்க டம்மையு

     மந்த ரத்தின்வழி யாவிடற் கினியொ

          ரைய மில்லையென வங்கவர்

     புந்தி யிற்கருதி வேறு வேறுகொலை

          பூணு நாளில்வர வோதுவாம்.

89

      (இ-ள்) அப்போது அந்தத் திருமக்கமா நகரத்தையுடைய காபிர்களான அவர்கள் யானைக் கூட்டத்தை அடர்த்து நின்றதாகிய ஒப்பற்ற ஆண்சிங்கமென்று சொல்லும் முகம்மதினது உபாயத்தையும் அவனுடைய நேரான மார்க்கத்திற்குப் பொருந்தியவர்களையும் ஆகாயத்தினது பாதையாக அனுப்புவதற்கு இனியொரு சந்தேகமுமில்லையென்று மனதின்கண் நினைத்து வெவ்வேறாகிய கொலைத் தொழிலிற் பொருந்தா நிற்கும் நாளில் வந்த வருகையை யாம் சொல்லுவாம்.

 

1429. மதுவ ழிந்தொழுகு மரவ மாலைபுனை

          வரைநி கர்த்தபுய அப்துல்லா

     புதல்வ ராகியமு கம்மதுந் தனியோர்

          போது நீடுககு பாவடுத்

     ததிவி தப்புதுமை மறைமொ ழிக்குமுத

          லாதி யைத்தலை வணங்கியே

     புதிய வேதமொழி கொடுபு கழ்ந்துநிலை

          பொருந்தி யங்ஙன மிருந்தனர்.

90

      (இ-ள்) தேனானது வழிந்து ஒழுகா நிற்கும் குங்குமப் புஷ்பத்தினாலான மாலைகளைத் தரித்த மலைபோலும் தோள்களையுடைய அப்துல்லா வென்பவர்களின் புத்திரராகிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் ஒரு தருணத்தில் ஏகமாக நீட்சியையுடைய கஃபத்துல்லாவை நெருங்கி அதிக விதமான ஆச்சரியங்களையுடைய