|
முதற்பாகம்
வேதவாக்கியத்திற்கு
முதன்மையாகிய ஆதியான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவைத் தலையைக் குனிந்து சுஜூதிட்டு நூதனமாகிய
புறுக்கானுல் அலீமென்னும் வேதவசனத்தைக் கொண்டு துதித்து அவ்விடத்திற்றானே
தரித்திருந்தார்கள்.
1430.
கண்ட காபிர்களி
லொருவ னோர்துகில்
கரத்தி
லொப்பறமு றுக்கியே
யண்டர் நாயகமு
கம்ம தின்றன
தருங்க
ழுத்துற விறுக்கினான்
விண்டி லாரெதிர்
விழித்திலா ரதனை
மெய்மை
யோருமபு பக்கர்தா
மிண்டு வல்வினை
யிதென்று கண்டற
விரைந்து
பாலினி லடைந்தனர்.
91
(இ-ள்)
அவ்விதம் இருப்பதைக் கண்களினாற் பார்த்த காபிர்களிலொருவன் ஒரு வஸ்திரத்தை நிகரறும்
வண்ணம் தனது கைகளினால் திரித்துத் தேவர்களுக்கும் நாயகமான நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களின் அருமையாகிய கழுத்திற் பொருந்தும்படி போட்டு இறுக்கினான். அப்போது
அந்நபிகள் பெருமானவர்கள் யாதொன்றும் பேசிலர்கள். மேலும் அவனை எதிராகப்
பார்த்திலர்கள். அதை உண்மையைத் தெளியா நிற்கும் அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு
அவர்கள் தங்களின் கண்களினாற் பார்த்து இஃது வலிய பாவத் தொழிலென்று சொல்லி மிகவும்
துரிதமாய் நெருங்கி அவர்களினிடத்திற் போய்ச் சேர்ந்தார்கள்.
1431.
மிடற்றி லுற்றதுகி றனைநெ
கிழ்த்துமிகு
வினைகொ லைக்கபடர் தங்களை
யடுத்த டாதசில
மொழியின் வேகமொ
டடர்த்து விட்டெழின் முகம்மதி
னிடத்தி ருந்துதொழு தெழுந்த
பின்புட
னெழுந்தி ருந்துதம தாவித
முடற்பு குந்தபடி மனைபு குந்தபி
னுயர்ந்த தம்மனை யடைந்தனர்.
92
(இ-ள்)
அவ்வாறு போய்ச் சேர்ந்த அபூபக்கரவர்கள் கழுத்திற் பொருந்திய வஸ்திரத்தை நெகிழச் செய்து
மிகுத்த கொலைத் தொழிலையுடைய கபடர்களான அந்தக் காபிர்களை நெருங்கித் தகாத சில
வார்த்தைகளினது வேகத்துடன் அடர்த்துவிட்டு அழகிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களினிடத்தில் தங்கியிருந்து அவர்கள் தொழுது எழும்பின பிற்பாடு அவர்களுட னெழும்பித்
தங்களின் ஜீவனானது தங்கள் சரீரத்தில்
|