பக்கம் எண் :

சீறாப்புராணம்

542


முதற்பாகம்
 

நுழைந்த வண்ணம் அவர்கள் வீட்டின்கண் போய் நுழைந்த பிறகு உயர்ச்சியுற்ற தங்களின் வீட்டின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

1432. அன்றொ ழிந்துசில நாள கன்றபின

          னாதி தூதெனு முகம்மது

     மன்ற றுன்றுமது மாலை நாற்றியொளிர்

          மணிதி கழ்ந்தககு பாவிடஞ்

     சென்ற டுத்தரு கிருந்து மூதுரை

          தெளித்த மாமறை வழிக்கொடே

     யொன்று பட்டமன மங்ங னஞ்சிறி

          துணங்கி லாதுற வணங்கினார்.

93

      (இ-ள்) அன்றையதினம் போய்ச் சிலநாட்கள் கழிந்த பின்னர் அனாதியான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் றசூலென்று சொல்லும் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வாசனையானது நெருங்கா நிற்கும் தேனையுடைய புஷ்பமாலைகளைத் தூக்கப் பெற்றுப் பிரகாசிக்கின்ற இரத்தினங்கள் விளங்கிய கஃபத்துல்லாவினிடத்திற் போய் நெருங்கி அதன் பக்கத்திலிருந்து முதிய வார்த்தைகளைத் தெளிக்கப் பெற்ற மகத்தான வேதநெறியைக் கொண்டு அவ்விடத்தில் ஒன்றுபட்ட தங்களின் மனமானது கொஞ்சமும் வாட்டமுறாது பொருந்தும் வண்ணம் ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவைத் தொழுதார்கள்.

 

1433. தக்க நன்னெறி பிழைத்த பாவியபு

         சகல்சைபா வொலிது தன்னுட

     னுக்கு பாவுமுத் பாவு மூடனுமை

         யாவு மீனனுமா றாவுமா

     யொக்க லோடவ ண்டைந்து நந்நபி

         யொழுங்குறுந் தொழுகை நோக்கியோர்

     விக்கி னத்தினை நினைத்தொ ருத்தனை

          விளித்து ளூரிடை விடுத்தனர்.

94

    (இ-ள்) அப்போது தகுதியான நல்ல சன்மார்க்கத்தில் தவறப் பெற்ற பாவிகளாகிய அபூஜகிலும், சைபாவும், ஒலிதொடு உக்குபாவும், உத்துபாவும், அறிவீனனாகிய உமையாவும், ஈனனான உமாறாவுமாகத் தங்களின் பந்துக்களுடன் அந்தக் கஃபத்துல்லாவிற் போய்ச் சேர்ந்து நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினது வரிசை பொருந்திய வணக்கத்தைக் கண்களினாற் பார்த்து மனசின்கண் ஒரு தீமையை எண்ணி ஒரு மனிதனைக் கூப்பிட்டு ஊரினது உள்ளிடத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.