|
முதற்பாகம்
1436.
மாத ருக்கரசி
பாத்தி மாவெனு
மடந்தை
கேட்டுள மயக்குற
வீதி வாயிடை
புகுந்து மின்னென
நடந்து
மாமறை விளக்கிடுந்
தாதை வெந்நிட
மிருந்த தைச்சிதறிச்
சரிவளைக்
கைகொடு தனிதுடைத்
தேத முற்றமொழி
காபி ரைச்சிறி
தெடுத்து
ரைத்துமனை மேவினார்.
97
(இ-ள்)
பெண்களுக்கு அரசியான பாத்திமா றலியல்லாகு அன்ஹாவென்று சொல்லும் மடந்தையானவர்கள் அவன்
அவ்வாறு சொல்லிய சமாச்சாரங்களைத் தங்களின் காதுகளினாற் கேள்வியுற்று மனமானது மயக்கமுறும்
வண்ணம் வீதியினிடத்தில் நுழைந்து கட்பார்வைக்குத் தோற்றியும் தோற்றாத விதத்தில்
அதிசீக்கிரமாய் ஆகாயத்தின்கண் உதயமாய் மறையா நிற்கும் மின்னலைப் போல விரைவாய் நடந்து
மகத்தான புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தை இவ்வுலகத்தின்கண் விளக்கும் தங்களின் தாதையாகிய
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினது முதுகினிடத்தி லிருக்கப் பெற்ற சுமையைச்
சிதறிக் கூட்டமான வளையல்களையுடைய தங்களின் கையைக் கொண்டு ஒப்பறத் துடைத்து அந்தக்
காபிர்களாகிய அபூஜகில் முதல்பேரை குற்றத்தைப் பொருந்திய சிறிது வார்த்தைகளை எடுத்துப்
பேசி வீட்டின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.
1437.
ஏக னைத்தொழு
தெழுந்தி ருந்துபி
னிடும்புசெய் தவரை நோக்கியே
மோக முற்றதனி
றப்பனா வுனது
முனிவினா
லிவர்க டங்களை
வேக முற்றகொடு
நரகிடைப் புகுத
விடுதல்
வேண்டுமென விரைவினான்
மாக நோக்கியிரு
கரமெ டுத்துபது
வாவு
ரைத்துநபி போயினார்.
98
(இ-ள்)
பின்னர் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் ஏகனான ஹக்கு சுபுகானகுவத்த
ஆலாவை வணங்கி எழுந்திருந்துத் தங்களுக்குத் துன்பத்தைச் செய்தவர்களான அந்தக் காபிர்களைப்
பார்த்து யாவர்களும் விரும்பிய எங்களுடைய றப்பானவனே! உன்னுடைய ஒப்பற்ற கோபத்தினால்
இந்தக் காபிர்களை வேகத்தைப் பொருந்திய கொடிய நரகலோகத்தின்கண் புகுதும் வண்ணம் விடுதல்
வேண்டுமென்று துரிதமாய் ஆகாயத்தைப் பார்த்து இரண்டு
|