|
முதற்பாகம்
1444.
மருந்தினான்
மணியான் மந்திரத் தொழிலான்
மாறிலா
மாயநோ யதனாற்
றிருந்திய
மதிகெட் டங்கமும் வேறாய்த்
திரிந்தவ
னாட்குனாட் டேய்ந்தான்
பருந்தெழுங்
கதிர்வேன் முகம்மதை யிகழ்ந்தோன்
படும்வர
லாற்றையு மறிந்து
மிருந்தகா
பிர்களி லொருவனுண் மதத்தா
லிடதுசெங்
கரங்கொடு பொசித்தான்.
105
(இ-ள்)
அன்றியும், அந்த அக்கமென்பவன் அவுஷதத்தினாலும் தரும முதலியவைகளைச் செய்து அதனாலுண்டாகும்
நன்மையினாலும் மந்திரச் செயலினாலும் மாறாத மாயத்தைக் கொண்ட அப்பிணியினால் செவ்வையுற்ற
தனது புத்தியும் பழுதாகிச் சரீரமும் வேறாகத் திரிந்து நாட்குநாள் மெலிவையடைந்தான்.
பருந்துகள் ஆகாயத்தின்கண் எழா நிற்கும் பிரகாசத்தைக் கொண்ட வேலாயுதத்தை யுடைய நாயகம்
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை நிந்தித்த அவன் படுகின்ற வரலாற்றையு முணர்ந்து
மிருக்கப் பெற்ற காபிர்களி லுள்ள ஒருவன் மனத்தின்கண் பொருந்திய செருக்கினால் சிவந்த இடது
கையைக் கொண்டு சாப்பிட்டான்.
போனக மருந்தாக்
கரத்தினா லமுது
1445.
பொசித்தவன் றனையெதிர் விளித்து
வானநா யகநன்
னெறிமுகம் மதுவும்
வலக்கரங்
கொடுபுசித் திடுமென்
றீனமற் றுரைப்ப
விடருறு மொழியா
யிடக்கரம்
வழங்குவ தலது
தேனவிழ்
தொடையாய் வலக்கரம் வழங்கா
தெனவவர்
திருமொழி மறுத்தான்.
106
(இ-ள்)
அன்னத்தைச் சாப்பிடாத இடது கையினால் அன்னத்தைச் சாப்பிட்ட அந்த மனிதனைச் சுவர்க்க
லோகத்தின் நாயகமாகிய நல்ல சன்மார்க்கத்தை யுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்கள் எதிராகக் கூப்பிட்டு அழிவில்லாது வலது கையைக் கொண்டு சாப்பிடுமென்று கூற; அவன்
துன்பத்தைப் பொருந்திய வார்த்தைகளாகத் தேனானது அவிழப் பெற்ற மலர்மாலை யணிந்த தோள்களை
யுடையவர்களே! எனக்கு இடதுகை வழங்குவதே யல்லாமல் வலதுகை வழங்காதென்று சொல்லி அந்நபிகள்
பெருமானவர்களின் தெய்வீகமுற்ற வார்த்தைகளை மறுத்தான்.
|