|
முதற்பாகம்
1454.
உரைத்தசொல்
லெவர்க்கு முறுதிநிண் ணயமென்
றனைவரு
முரைத்திட மகிழ்ந்து
நிறைத்தகுங்
குமத்தார்ப் புயநபி யினியா
னிகழ்த்திய மார்க்கநன் னெறியைத்
தரைத்தலத்
தீமான் கொள்ளுதற் கிசையாத்
தரம்படைத்
தவரனை வரையுங்
கரைத்திட நனிய
தாபெனுங் கொடிய
கடும்பிணி
பிடித்திடு மென்றார்.
115
(இ-ள்)
அவ்வாறு அவர்கள் கேட்கவே, அங்கு தங்கியிருந்த காபிர்க ளெல்லாவர்களும் நீங்கள் சொல்லும்
வார்த்தைகள் எங்கள் யாவர்களுக்கும் உண்மையான நிச்சயந்தானென்று சொல்ல வரிசையாக்கப்பட்ட
குங்குமப் புஷ்பத்தினாலான மலர்மாலை யணிந்த தோள்களையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் மகிழ்ச்சி யடைந்து யான் இந்தப் பூலோகத்தின்கண் கூறிய தீனுல்
இஸ்லாமென்னும் மார்க்கத்தினது நன்மை பொருந்திய பாதையை ஈமான் கொள்ளுவதற்கு உடன்படாத
முறைமையைப் படைத்தவர்க ளெல்லாவரையும் இனிக் கரைக்கும் வண்ணம் மிகுத்த அதாபென்று சொல்லும்
கொடிய கடுமையான நோயானது பிடிக்குமென்று சொன்னார்கள்.
1455.
கூறிய மொழிகேட் டபூலகு பெனுமக்
கொடியவ
னிருவிழி சிவந்து
மாறுபட் டிதற்கோ
குலத்தொடுங் கெடுவாய்
வரவழைத்
தனையெனச் சீறித்
தேறிலா துறுக்கி
யிருகரம் புதைப்பச்
செறிதரு
பூழ்தியை வாரி
யீறிலான் றூதை
முகம்மதைச் சிறிது
மெண்ணிலா
தெதிர்ந்துநின் றெறிந்தான்.
116
(இ-ள்)
நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு சொல்லிய வார்த்தைகளை
அவர்களின் பெரிய தந்தையர்களி லொருவனான அபூலஹபென்று சொல்லும் அந்தக் கொடுமையை யுடையவன்
தனது காதுகளினால் கேள்வியுற்று இரண்டு கண்களும் சிவந்து அவ்வார்த்தைகளுக்கு மாறுபட்டுக்
ழுகுடும்பத்தோடும் நாசமடைவாய்ழு இதற்காகவா? எங்களை இங்கு வரவழைத்தாய்? என்று சொல்லிக்
கோப்தித் மனந்தேறாது அதட்டி இரண்டு கைகளும் புதையும் வண்ணம் பூமியின்கண் கிடக்கப் பெற்ற
செறிந்த பூழ்தியை வாரி முடிவற்றவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் றசூலானவர்களை,
முகம்மதானவர்களை, மனசின்கண் கொஞ்சமும் நினையாமல் எதிர்த்து நின்று வீசினான்.
|