|
முதற்பாகம்
1456.
அடர்ந்தெதிர்ந் துரைத்த கொடியவ னபூல
கபுபுவி
யிடத்துமா கிறத்து
மிடைந்திடும்
பெருங்கே டுடையவ னிவனே
யென்னுமப்
பொருளுரை பிறப்பத்
துடங்குதப் பத்ய
தாவெனத் தோன்றுஞ்
சூறத்தொன்
றிறங்கிய துலகிற்
கிடந்தமும்
மறையுந் தெரிதரப் புகழ்ந்த
கிளரொளி
முகம்மது நபிக்கே.
117
(இ-ள்)
அப்போது இவ்வுலகத்தின்கண் கிடக்கப் பெற்ற தவுறாத்து; இஞ்சீல்; சபூறென்னு மூன்று வேதங்களும்
அறியும் வண்ணம் துதித்து ஓங்கா நிற்கும் பிரகாசத்தையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களுக்குத் தங்களை எதிர்த்து நெருங்கிப் பேசிய கொடியவனான அபூலஹ பென்பவனை
இப்பூமியின்கண்ணும் ஆகிறத்தின்கண்ணும் வசக்கேடுற்றிடும் பெரிய கேட்டையுடையவன் இவன்
தானென்று சொல்லும் அந்த அர்த்தத்தினது வசனமானது உண்டாகும்படி துடங்குகின்ற ழுதப்பத்யதாழு
வென்று உதயமாகிய ஒரு சூறத்தானது இறங்கினது.
1457.
சூறத்தின் பொருளை முகம்மது முரைப்பத்
துணுக்குறா
துனதுரை யுலகிற்
றேறத்துன்
புறுங்கே டெனக்குவந் தடைந்தாற்
றேடிய
திரவிய மனைத்து
மீறத்தந்
திரருக் களித்திட ரதனை
விரைவினிற் போக்குவ னென்னப்
பேறத்த மிலசொ
லுரைத்தன னெவர்க்கும்
பெருங்கொலைப் பிழைவிளைத் திடுவான்.
118
(இ-ள்)
நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் அவ்வாறு இறங்கிய சூறத்தினது
அர்த்தத்தைச் சொல்லவே யாவர்களுக்கும் பெரிய கொலையாகிய குற்றத்தை விளைக்கப்பட்டவனான
அவ்வபூலஹ பென்பவன் பயப்படாது உனது வார்த்தையை இந்த உலகத்தில் தேறும் வண்ணம் எனக்கு
வருத்தம் பொருந்தும் கேடானது வந்து சேர்ந்தால் நான் சம்பாதித்த பொருள்க ளெல்லாவற்றையும்
அதிகமாய்த் தந்திரர்களுக்குக் கொடுத்து அந்த இடரைச் சீக்கிரத்தில் இல்லாமற்
செய்வேனென்று பேறானது முடிவிலு மில்லாத சொல்லாகச் சொல்லினான்.
1458.
இறையவன் றூதர்க் கிசைத்தசொற் கெதிரா
யிசைத்திடு
மபூலக பென்போ
னிறைதரும் பொருளு
மிழந்துத வாம
னெட்டுடற்
பெருந்தலை யரவ
|