|
முதற்பாகம்
முறைதரு நரகம்
புகுவனென் றாயத்
திறங்கிய
துலகெலாம் விளங்க
மறைமொழி
பயிற்றுஞ் செவ்விதழ் மணிவாய்
முகம்மது
மனமகிழ் பெறவே.
119
(இ-ள்) அவன்
அவ்வாறு சொல்லவே யாவற்றிற்கு மிறைவனாகிய ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவானவன் தனது றசூலான நபிகள்
பெருமானவர்களுக்குச் சொல்லிய வார்த்தைகளுக் கெதிராகச் சொல்லும் அபூலஹபென்பவன் தனது
பெருகிய பொருள்களையும் இழக்கப் பெற்று யாதொன்றுக்கும் உதவாமல் நெடிய சரீரத்தையும் பெரிய
தலையையுமுடைய சர்ப்பங்கள் தங்கிய நரகலோகம் போய்ச் சேருவானென்று எல்லாவுலகங்களும்
விளங்கும் வண்ணம் வேதவசனங்களைப் பயிற்றா நிற்கும் சிவந்த அதரங்களைக் கொண்ட அழகிய
வாயையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மனமகிழ்ச்சி பெறும்படி ஹக்கு
சுபுகானகுவத்த ஆலாவின் பக்கத்தில் நின்றும் ஆயத்தென்று சொல்லும் ஒரு வேதவசன மிறங்கிற்று.
1459.
அவனியிற் கேடு முடிவினி னரகு
மடைகுவ
னபூலக பெனவே
செவியுற வாயத்
திறங்கிற்றென் றுரைத்த
வுரைக்குஞ்சேர் தருமின மனைத்துங்
கவினற அதாபென்
றொருபிணி பிடிக்கு
மென்றகட்
டுரைக்குமே கன்றித்
தவிர்கிலா வயிர
மனத்தராய்க் காபிர்
தனித்தனி
கொலைத்தொழி னினைத்தார்.
120
(இ-ள்)
அவ்வாறு அபூலஹ பென்பவன் பூலோகத்தின்கண் கேட்டையும் கடைசியில் நரகலோகத்தையும்
பெறுவானென்று ஆயத்தென்னும் ஒரு வேதவசன மிறங்கிற்றென்று நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் அங்குற்ற அனைவர்களின் காதுகளிலும் பொருந்தும் வண்ணம் கூறிய
வார்த்தைகளுக்கும், அவனைச் சேர்ந்த இனத்தவர்களெல்லாவரையும் அழகானதற்றுப் போகும்படி
அதாபென்று சொல்லும் ஒப்பற்ற நோயானது பிடிக்குமென்று சொல்லிய உறுதி வாக்கியத்திற்கும்,
அந்தக் காபிர்கள் கோபித்து ஒழியாத வயிரத்தைக் கொண்ட மனத்தையுடையவர்களாய்த்
தனித்தனியாகக் கொலைத் தொழிலை இருதயத்தின்கண் எண்ணினார்கள்.
|