|
முதற்பாகம்
(இ-ள்) மகத்தான வேதவாக்கியத்தை ஒழியாது வளர்க்கா நிற்கும் நாவை யுடைய முதியவரான ஹப்பாபு
றலியல்லாகு அன்கு அவர்கள் இனிமையுடன் சொல்ல, உமறுகத்தாபென்பவர் இரத்தக் கறைகள் பொருந்திய
இலைகளையுடைய வேலாயுதத்தைக் கையின்கண் தாங்கிக் கொண்டு உவகையோடும் சீக்கிரத்தி லெழும்பிக்
குறையாத சந்திரனைப் போலத் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தை வளர்க்கும் குரிசிலான நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் தங்குதலைப் பொருந்திய சோலைகள் சூழ்ந்த அந்தச் சபாமலையின்கண்
போய்ச் சேர்ந்தார்.
1586.
மலையி னிடத்தி
னுயர்ந்திருந்த
மனையை
நோக்கி யெம்மருங்குங்
குலவ நோக்கி
மாந்தருறை
குறிப்புற் றறியத் தோன்றாமல்
விலகுங்
கதிர்மெய்க் குரிசினபி
யுறைவ
திவணே யெனவிரைவி
னிலைகொள்
கபாடந் தனைத்தீண்டி
நின்றா
ரறிவு குன்றாரே.
84
(இ-ள்)
அவ்வாறு போய்ச் சேர்ந்த அறிவானது குறையாதவரான உமறுகத்தா பென்பவர் அந்தச் சபாமலையின்கண்
உயர்ச்சியுற்றிருந்த வீட்டைக் கண்டுப் பிரகாசிக்கும் வண்ணம் எப்புறங்களிலும் பார்த்து
மனுஷியர்கள் தங்காநின்ற அடையாளத்தை பொருந்தி யறிவதற்குத் தெரியாது பக்கத்தில் விலகி
யொளிரும் பிரகாசத்தைக் கொண்ட சரீரத்தை யுடைய குரிசிலான நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் தங்கும் இடம் இவ்விடந்தானென்று சொல்லிச் சீக்கிரமாய் நிலையைக்
கொண்ட அவ்வீட்டினது கதவைத் தொட்டுத் தட்டி நின்றார்.
1587.
இணைத்தாள் செறித்த மணிக்கதவந்
தீண்டி
யிவணி லடைந்தோர்தீ
னணித்தார்
புறத்தா ரெனநோக்கி
யுமறென்
றறிந்தங் கனைவோரும்
பணித்தாழ்
குழியிற் களிற்றினம்போற்
பதறிப்
பயந்துள் ளகங்கலங்கித்
தணித்தா
ரிலைமெய் நடுக்கமுரை
தவிர்ந்தார் முகங்கள் குவிந்தாரே.
85
(இ-ள்)
அப்போது அங்குள்ள யாவர்களும் இவ்விடத்தில் வந்து சேர்ந்து இரு தாட்களைச் செறிக்கப்பெற்ற
அழகிய கதவைத்
|