பக்கம் எண் :

சீறாப்புராணம்

598


முதற்பாகம்
 

தொட்டுத் தட்டினவர்கள் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தில் நெருங்கினவர்களா? அல்லது அவ்விதம் நெருங்காத அன்னியர்களா? என்று பார்த்து உமறுகத்தா பென வுணர்ந்து தாழ்வை யுடைய பொறிக்கிடங்கின் யானைக் கூட்டத்தைப் போன்று நடுக்கமுற்று அஞ்சி மனமானது கலக்கமடைந்து சரீரப் பதறுதலைத் தணியாதவர்களாய்த் தங்களின் வார்த்தைக ளொழிந்து முகங்களும் குவியப் பெற்றார்கள்.

 

1588. வெருவி யுரையா திருந்தவரை

         விழித்துக் கரத்தா லடர்களிற்றைப்

     பொருவு மம்சா மனம்வெகுண்டு

         புகழ்தற் கரிய திருக்கலிமா

     மருவி வருவா ரெனிலுமறு

         மதிக்கு மதிக்கும் படியாகப்

     பெருகு நலனுஞ் சுவனபதிப்

         பேறும் பெறுவ ரெனவுரைத்தார்.

86

      (இ-ள்) அவ்வாறு பயந்து பேசா திருந்தவர்களான முஸ்லிம்களை, கையினால் அடரா நிற்கும் யானையை நிகர்த்த ஹம்சா றலியல்லாகு அன்கு அவர்கள் பார்த்து மனமானது கோபிக்கப் பெற்று உமறென்பவர் துதித்தற் கருமையான நமது தெய்வீகந் தங்கிய கலிமாவைப் பொருந்தி வந்தாரென்னில் யாவர்களும் தங்களின் புத்தியின்கண் மதிக்கும் வண்ணமாய்ப் பெருகா நின்ற நன்மையையும் சொர்க்க லோகத்தின் பேற்றையும் பெறுவாரென்று சொன்னார்கள்.

 

1589. இகலுந் தீங்கு மனத்திருத்தி

         யெழுந்தா ரெனிலங் கவர்கரத்திற்

     றிகழுங் கதிர்வாட் டனைப்பறித்துச்

         சென்னி களைவ தறுதியிதற்

     ககலு மனத்தால் வெருவிடலிவ்

         வவையீர் மணித்தாள் செறிகதவந்

     தகவல் விடுமி னெனமறுத்து

         முரைத்தார் தடத்தார்ப் புயத்தாரே.

87

      (இ-ள்) அவ்விதம் சொன்ன பெரிய மாலையை யணிந்த தோள்களை யுடையவர்களான அந்த ஹம்சா றலியல்லாகு அன்கு அவர்கள் விரோதியா நிற்கும் தீமையை மனசின்கண் இருக்கும்படி செய்து யெழும்பிவந்தாரே யானால் அவ்விடத்தில் அவரினது கையில் பிரகாசியா நிற்கும் கிரணங்களை யுடைய வாளாயுதத்தைப் பறித்து அவரின் சிரத்தைக் களைவதே முடிவு. இந்தச் சபையையுடையவர்களே! நீங்கள் இதற்கு உங்கள் அகன்ற மனசின்கண்