பக்கம் எண் :

சீறாப்புராணம்

604


முதற்பாகம்
 

றலியல்லாகு அன்கு அவர்களும் அலி றலியல்லாகு அன்கு அவர்களும் சத்துராதிகளின் மீது பிரயோகியா நிற்கும் வேலாயுதத்தைக் கொண்ட கையையுடைய உமறுகத்தாபு றலியல்லாகு அன்கு அவர்களும் மதுவானது நெகிழ்கின்ற இதழ்கள் பிரகாசிக்கும் புஷ்பமாலை யணிந்த அறபி வேந்தர்களும்.

 

1601. தோமகன் முகம்மது நபியுஞ் சூழ்வர

     மாமதி ணகர்ப்புறத் தெய்தி மற்றொரு

     தேமலர்ப் பொழிலிடை தெரிய வைகினார்

     காமரு மதியமுங் கணமு மென்னவே.

4

      (இ-ள்) குற்றமானது நீங்கப் பெற்ற நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் தங்களைச் சூழ்ந்து வரும் வண்ணம் பெருமை பொருந்திய மதிள்களையுடைய தங்கள் நகரமாகிய மக்காப் பதிக்கு வெளியில் அடைந்து வாசனையைக் கொண்ட புஷ்பங்களை யுடைய ஒரு சோலையின்கண் அழகிய சந்திரனையும் நட்சத்திரங்களையும் போல விளங்கும் வண்ணம் தங்கி யிருந்தார்கள்.

 

1602. செல்லிடுங் குடைநபி செவ்வி காண்டலுங்

     கல்லொடு மரமும்புற் கானும் வாவியு

     மெல்லிய சிறைப்புள்ளும் விலங்கி னங்களு

     மொல்லையூர் வனவனத் துகளுஞ் சாதியும்.

5

      (இ-ள்) அப்போது மேகங்க ளிடுகின்ற குடையை யுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் சரீர வழகைப் பார்த்த மாத்திரத்தில் அங்குள்ள கற்களுடன் மரங்களும் புற்களையுடைய காடுகளும் தடாகங்களும் மெல்லிய சிறகுகளை யுடைய பட்சிகளும் மிருகக் கூட்டங்களும் விரைவில் ஊர்ந்து திரியும் ஊர்வனங்களும் காட்டின்கண் பாய்ந்து திரியும் சாதிகளும்.

 

1603. தோற்றிய தெவ்வையுந் துலங்கக் கேட்பதா

     மாற்றருஞ் சுருதியின் வசனந் தன்னொடும்

     போற்றரும் புகழ்ச்சியாற் புகழ்ந்து பொங்கிய

     வூற்றமுற் றுயர்சலா முரைத்து நின்றவே.

 6

      (இ-ள்) கண்பார்வைக்குத் தெரியக் கூடியதான மற்ற எல்லாவகைகளும் விளங்கும் வண்ணம் காதுகளினாற் கேட்கும்படியாக மாற்றுதற்கரிய வேதவசனத்தோடும் போற்றுதற்கு அருமையான துதிகளினால் துதித்து அதிகரியா நிற்கும் அறிவினுடமையைப் பொருந்தி மேலாகிய ழுஅஸ்ஸலாமு அலைக்கும்ழு என்று சலாஞ் சொல்லி நின்றன.