முதற்பாகம்
(இ-ள்)
அவ்விதம் சென்ற வேடனானவன் காட்டினுள் வளைந்து திரிந்தும் கற்களைத் தள்ளியும் மான்
கூட்டங்கள் தடைபடும் வண்ணம் வலைகளைக் கட்டியும் மலைகளினது குகைகளிலும் தடவிப் பார்த்தும்
மாமிச முண்பதற்காக யாதொன்றும் கண்டிலன்.
1608.
அடவியிற் புகுந்தரும் பதுக்கை சுற்றியோர்
புடையினின்
முசலிகை புகுதக் கண்டனன்
றடைபட வலைவயின்
சாய்த்து மேற்சிலை
யுடைபடத்
தாக்கித்தன் னுரத்திற் பற்றினான்.
11
(இ-ள்)
அதனால் அவன் சோலைகளில் நுழைந்து அரிய பாதைகளைச் சுற்றி ஒரு புடையின் கண் ஓருடும்பானது
புகுதும் வண்ணம் பார்த்து அவ்வுடும்பைத் தடைபடும்படி வலையினிடத்தில் சரித்துப் புடையினது
மேலேயுள்ள கல்லானது உடையும் வண்ணம் அடித்துத் தனது மார்போடும் பிடித்தான்.
1609.
வள்ளுகி
ருடும்பினை வலைக்குண் மாட்டிவை
முள்ளுறை கானமு
முரம்பு நீக்கித்த
னுள்ளக
மகிழ்வொடு முழையர் சூழ்தர
நள்ளுறை முகம்மது
நபியை நோக்கினான்.
12
(இ-ள்)
அவ்விதம் பிடித்த கூரிய நகத்தையுடைய அந்த உடும்பை அவ்வேடனானவன் வலையினகம் கட்டித் தனது
மனசினுள் மகிழ்ச்சியோடும் நுணுக்கமாகிய முட்கள் தங்கிய காடுகளையும் பாறைகளையுந் தள்ளி
நடந்து தங்களின் உழையர்களான முஸ்லிம்கள் வளையும் வண்ணம் நடுவில் தங்கிய நாயகம்
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைக் கண்களினாற் பார்த்தான்.
1610.
மன்னிய வறிஞரி
னாப்பண் வைகிய
தென்னிவர்க்
குறுஞ்செய லியாது கொல்லென
முன்னிய
வேட்டுவன் மொழிய வாதித
னன்னிலைத்
தூதிவர் நபியென் றோதினார்.
13
(இ-ள்)
அவ்வாறு பார்த்து இவர் பொருந்திய அறிவையுடையவர்களான இவர்களின் நடுவில் தங்கினது என்ன
காரணம்? அன்றியும், இவருக்கு இசைந்த தொழில் யாது? என்று நினைத்த அந்த வேடன் அங்கிருந்த
அசுகாபிமார்களிடத்திற் கேட்க அதற்கவர்கள் இவர்கள் யாவற்றிற்கு முதன்மையனான ஜல்லஜலாலகு
வத்த ஆலாவின் நன்மை பொருந்திய நிலைமையை யுடைய றசூலான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல
மென்று சொன்னார்கள்.
|