பக்கம் எண் :

சீறாப்புராணம்

607


முதற்பாகம்
 

1611. மைமுகிற் கவிகைநன் னபிமுன் வந்துநின்

     றெம்மறைக் குரியவர் நீவி ரெந்நெறி

     செம்மையி னடத்துத றெளியச் செப்புமென்

     றிம்மொழி யறபிவேட் டுவனி சைத்தினன்.

14

      (இ-ள்) அதைக் கேட்ட அந்த அறபியாகிய வேடன் கறுத்த மேகக்குடையை யுடைய நன்மை பொருந்திய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் முன்னர் வந்து நின்று கொண்டு நீவிர் எந்த வேதத்திற்கு உரித்தானவர்? அழகாய் நீர் நடாத்துவது எந்த மார்க்கம்? அவற்றை யான் தேரும் வண்ணம் சொல்லுமென்று இந்த வார்த்தைகளைக் கேட்டான்.

 

1612. கூறிய வறபியைக் குறித்துக் காசினிக்

     கீறினில் வருநபி யான லாதிலை

     யூறிய பொருட்புறுக் கானென் றோதிய

     தேறுநன் மறையெனக் குற்ற செவ்வியோய்.

15

      (இ-ள்) அவ்வாறு கேட்ட அந்த அறபியாகிய வேடனை நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மனசின்கண் மதித்து அழகையுடைய வேடனே! யான் இப்பூலோகத்திற்குக் கடைசியாக வந்த நபி. என்னை யல்லாமல் இனிமேல் இந்தப் பூமியின்கண் நபிமார்களுமில்லர். சுரக்கா நின்ற பொருளையுடைய புறுக்கானுல் அலீமென்று சொல்லும் எனக்குற்ற நன்மை பொருந்திய வேதமானது உயர்வாகும்.

 

1613. என்னுரை நின்றிசு லாமி லாயினோர்

     மின்னொளிர் மாளிகைச் சுவன மேவுவர்

     பன்னியிம் மொழிபழு தென்னும் பாவியோர்

     வன்னியின் குழியிடைக் கிடந்து மாழ்குவார்.

16

      (இ-ள்) அன்றியும், எனது வார்த்தைகளில் நின்று தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தி லானவர்கள் பிரபையானது ஒளிரா நிற்கும் மாளிகைகளை யுடைய சுவர்க்கலோகத்தைப் பொருந்துவார்கள். இந்த வார்த்தைகளைத் தெளிந்து குற்றமென்று சொல்லும் பாவிகள் அக்கினியினது குழிகளை யுடைய நரகத்தின்கண் கிடந்து மயங்குவார்கள்.

 

1614. ஈதுநன் றெனமன மிசைந்தென் னாவினி

    லோதிய நன்கலி மாவை யோதிநின்

    பாதகந் துடைத்துநற் பதவி யெய்தென

    வாதிதன் றூதுவ ரறைந்திட் டாரரோ.

17

      (இ-ள்) ஆதலால் இதுவே நல்லதென்று உனது மனமானது பொருந்தி எனது நாவினால் சொல்லும் நன்மை தங்கிய