முதற்பாகம்
(இ-ள்) அரசரானவர்களே,
முகம்மதென்று ஒருவன் உதயமாய் நமது வணக்கத்தையும்
மார்க்கத்தையும் விசாலமாகிய இந்தப் பூலோகமானது
உண்டான அக்காலத்திலேயே உண்டாயிருக்கும்
கோயில்களெல்லாவற்றையும் நமது முன்னவர்கள் கூறும்
நன்மை பொருந்திய வேதங்களையும் வளைந்த ஒப்பற்ற
குலத்தையும் மற்றவைகளையும் பகையோடும் அழித்து
நின்றான். இவைகள் தாம் இங்கு உண்டாயினவைகள்.
1754.அகலிடம் விளக்குஞ்
செங்கோ லணிமணித் தீப மேநேர்
புகலுமும் மறையுந் தேர்ந்த புந்தியிற் கடலே
நாளு
மிகலுடை யரசர்க் கெல்லா மெதிரிடி யேறே
வானுஞ்
சகமுமெண் டிசையுந் திக்கும் வெண்புகழ் தடவும்
வேந்தே.
4
(இ-ள்) விசாலமான இப்பூலோகத்தை
விளக்கா நிற்கும் செங்கோலையுடைய அழகிய இரத்தினத்
தீபமானவர்களே! சத்தியத்தைக் கூறுகின்ற தவுறாத்து,
சபூர், இஞ்சீலென்னும் மூன்று வேதங்களையும் தெளிந்த
அறிவையுடைய சமுத்திரமானவர்களே! பிரதிதினமும்
விரோதத்தையுடைய அரசர்களெல்லாவருக்கும் எதிராயுள்ள
இடியேறானவர்களே! ஆகாயத்திலும் பூலோகத்திலும்
எண்டிசைகளிலும் நான்கு திக்குகளிலும் வெள்ளிய
கீர்த்தியைத் தடவும் அரசரானவர்களே!
1755.மறுவற வுலகி
னில்லா வயதொரு நூற்றின் மேலு
மறுபது மிருந்தோய் நுந்த மறிவினா லறியா
தில்லைச்
சிறியவ ருரைத்த தல்லாற் செவியினுந் தெரிவ
தாகுங்
கறையற விற்றைப் போதிற் கண்ணினுங்
காண்பி ரென்றார்.
5
(இ-ள்) குற்றமற இவ்வுலகத்தின்கண்
இல்லாத வயதானது ஒப்பற்ற நூற்றினது மேலும் அறுபதும்
இருந்தவர்களே! உங்களுடைய அறிவினால் அறியாதது
யாதொன்று மில்லை. சிறியவர்களான நாங்கள்
சொன்னதேயல்லாமல் தங்களின் காதுகளினாலும்
தெரிவதாகும். களங்கமற இன்றைய தினத்தில்
கண்களினாலும் பார்ப்பீர்களென்று சொன்னார்கள்.
1756.ஓலையுத் தரமு
மியாங்க ளுரைத்தது முகம்ம தென்போன்
பாலினின் முரணி னூறு பங்கினி லொன்றுங் காணா
தோலிடுங் கடன்மாச் சேனை யுரவவென் றுரைப்ப
மூன்று
காலமுந் தெரிந்து நோக்குங் காவலன்
செவியிற் கொண்டான்.
6
(இ-ள்) முன்னர் நாங்கள் எழுதி
அனுப்பி வைத்த ஓலையினது உத்தரமும் இப்போது நாங்கள்
முகதாவில் போதித்ததும் அந்த முகம்மதென்பவனின்
பக்கத்திலுள்ள முரணில் நூறுபாகத்தில்
|