பக்கம் எண் :

சீறாப்புராணம்

659


முதற்பாகம்
 

ஒன்றிற்கும் பற்றாது ஓலமிடா நிற்கும் சமுத்திரத்தை நிகர்த்த பெருமை தங்கிய சேனையையுடைய முதியவர்களே! என்று சொல்ல, அவற்றை இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலமென்னும் முக்காலங்களையும் உணர்ந்து பார்க்கும் அரசனான ஹபீபென்பவன் தனது காதுகளில் கொண்டான். 

 

1757.உரைத்தவிவ் வசன மெல்லா முள்ளுறப் பொருத்தி நாளை

    வரைத்தடப் புயத்து வீர முகம்மதை விளித்து மார்க்கம்

    பொருத்தறப் புகன்ற செய்தி யறிகுவ மிற்றைப் போதிற்

    றிருத்தகு மனையின் கண்ணே யாவருஞ் செல்க வென்றான்.

7

      (இ-ள்) அபூஜகில் முதலிய அவர்கள் கூறிய இந்த வார்த்தைகளெல்லாவற்றையும் ஹபீபரசன் தனது மனசின் கண்ணே பொருந்தும் வண்ணம் பொருந்தி மலையை நிகர்த்த பெரிய தோள்களைக் கொண்ட வீரத்தையுடைய அந்த முகம்மதுவை நாளைய தினத்தில் இங்கு வரவழைத்து அவன் நமது மார்க்கமானது பொருத்தறும்படி சொல்லிய வார்த்தைகளை அறிகுவோம். இன்றைய தினம் நீங்கள்யாவர்களும் உங்களின் செல்வத்தையுடைய வீட்டிற்குச் செல்லுங்களென்று சொன்னான்.

 

1758.அரசுரை கேட்டு வீர ரவரவர் மனையிற் சார்ந்தார்

    கரைதிரை புரட்டு மேலைக் கடலிடைக் கனலி சார்ந்தா

    னிரவினைப் பகலைச் செய்யு மெழின்மணித் தவிசின் மீதிற்

    குரவர்கண் விழிப்ப வோசைக் குணகடல் வெளுத்த தன்றே.

8

      (இ-ள்) அவ்வாறு சொன்ன அரசனாகிய ஹபீபென்பவனின் வார்த்தைகளை வீரர்களான அபூஜகில் முதலிய யாவர்களும் தங்களின் காதுகளினால் கேள்வியுற்று அவரவர்களின் வீட்டின்கண் போய்ச் சேர்ந்தார்கள். அப்போது சூரியனானவன் அலைகளைக் கரையின்கண் புரட்டா நிற்கும் மேல்பாற் சமுத்திரத்தின்கண் போய்ச் சேர்ந்தான். பின்னர் இராக்காலத்தைப் பகற்காலமாய்ச் செய்யா நிற்கும் அழகிய இரத்தினவர்க்கங்களையுடைய ஆசனத்தின் மீதில் ஹபீபரசன் முதலிய மந்திரி பிரதானியர்கள் கண் விழிக்கும் வண்ணம் ஒளியையுடைய கீழ்பாற் கடல் வெளுத்தது.

 

1759.விடிந்தபி னவனிப் பொன்னா டெனும்விறற் பதியின் வீர

    ரிடந்தரு திமஸ்கின் வேந்தைக் காண்பதற் கெழுந்தார் வெற்றிப்

    படந்தரு கொடியிற் றூண்டும் பகைப்பெருங் கடலைக் கையாற்

    கடந்தவே லபித்தா லீபு கலன்பல வணிவ தானார்.

9