பக்கம் எண் :

சீறாப்புராணம்

660


முதற்பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு வெளுத்து நேரம் விடிந்த பின்னர் பூலோகத்தினது சுவர்க்கலோகமென்று சொல்லும் வெற்றியையுடைய திருமக்கமா நகரத்தின் வீரர்களான காபிர்கள் விசாலமாகிய திமஸ்கு நகரத்தினது அரசனான ஹபீபென்பவனைப் பார்ப்பதற்காய் எழும்பினார்கள். வெற்றியைக் கொண்ட படங்களையுடைய கொடிகளினால் தூண்டா நிற்கும் பகைமையாகிய பெரிய சமுத்திரத்தைக் கையினால் தாண்டிய வேலாயுதத்தை யுடைய அபீத்தாலி பவர்கள் பல ஆபரணங்களைத் தரிக்க ஆரம்பித்தார்கள்.

 

1760.வையகம் புரந்து தீனை வளர்த்திடு மிபுறா கீந்தங்

    கையொலி யலைச்செங் கையா லரையினிற் கவினச் சேர்த்தித்

    துய்யவன் றூதர் முன்னந் தோன்றிய ஆத மென்போர்

    மெய்யணி குப்பா யத்தை வியன்பெற மெய்யிற் சேர்த்தார்.

10

      (இ-ள்) இந்தப் பூலோகத்தைக் காத்து தீனை வளர்த்த நபி இபுறாகீம் அலைகிஸ்ஸலா மவர்களின் கையொலியலைத் தங்களின் சிவந்த கையினால் அரையின்கண் அழகாயிருக்கும் வண்ணம் சேர்த்து பரிசுத்த முடையவனாய் ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின் றசூலான இப்பூலோகத்தின்கண் ஆதியிலுதயமாகிய நபி ஆதமலை கிஸ்ஸலாமென்பவர்கள் தங்களின் திருமேனியின்கண் தரித்த குப்பாயத்தைப் பெருமை பெறும்படி சரீரத்தின்கண் சேர்த்தார்கள்.

 

1761.கருவிமென் மிடற்றிற் றீண்டாக் காரண ரிசுமா யீல்தஞ்

    சருவந்து சிரசிற் சேர்த்தித் தாரணி தனிற்பொன் னாட்டு

    மருமலர்ப் புயத்திற் றாங்கி வளர்நபி சீது மெய்யிற்

    றருகதி ருத்த ரீயந் தனையெடுத் தணிந்தா ரன்றே.

11

      (இ-ள்) அன்றியும், தங்களின் தந்தையாகிய நபி இபுறாகீ மலைகிஸ்ஸலா மவர்களால் அறுத்த ஆயுதமானது மெல்லிய கழுத்தில் தீண்டாத காரணரான நபி இஸ்மாயீலலைகிஸ்ஸலாமவர்களின் தலைப் பாகையைத் தலையின்கண் சேர்த்து இப்பூலோகத்தில் சுவர்க்கலோகத்தினது வாசனையைக் கொண்ட புஷ்பத்தினாலான மாலையைத் தோளின்கண் தரித்து ஓங்கிய நபி சீது அலைகிஸ்ஸலா மவர்கள் சரீரத்தில் தரித்த பிரகாசத்தையுடைய உத்தரீயத்தைத் தூக்கி மெய்யின்கண் தரித்தார்கள்.

 

1762.சூலினைத் தரித்த கொண்டற் சுகைபுநன் னபிதஞ் செம்பொற்

    காலிணைக் கபுசை வீரக் கழலடி பொருந்தச் சேர்த்திச்

    சாலவுங் குலத்து முன்னோர் தரித்திடுங் கலன்க டாங்கி

    வேலினைக் கரத்தி லேந்தி வீரவாண் மருங்கு சேர்த்தார்.

12