|
முதற்பாகம்
(இ-ள்) அழகிய வீரத்தன்மையையுடைய
அரசராகிய அபீத்தாலிபென்பவர் அவ்விதம் நடந்து
முத்துக்களை வரிசையாய்ப் பதித்துப் புஷ்பங்களினாலான
நெடிய மாலைகளைத் தூக்கப் பெற்றுப் புதிய நறவத்தைச்
சொரியா நிற்கும் மேன்மையையுடைய பந்தரின்கண் நுழைந்து
அழகானது மாறப்பெறாத மதயானையாகிய திமஸ்கு நகரத்தினை
அரசாட்சி செய்யும் ஹபீபரசனை எதிரிற் பார்த்தார்.
1766.கங்கமுல வுங்கதி
ரயிற்கடவு டன்னை
மங்குலக லொண்கதிர் மணிக்கடக மின்ன
வங்கையிணை தொட்டினி தழைத்தரு கிருத்தி
யிங்கித மொடுந்திமஸ்கி னுக்கிறை
யிருந்தான்.
16
(இ-ள்) அப்பொழுது திமஸ்கு
நகரத்தினது அதிபதியாகிய ஹபீபென்பவன் பருந்துகளானவை
யுலவா நிற்கும் பிரகாசத்தைக் கொண்ட வேல்வித்தையின்
கடவுளான அபீத்தாலிபென்பவரை அந்தகாரமான தகலப்பெற்ற
ஒள்ளிய பிரகாசத்தையுடைய தனது இரத்தினக் கடகங்களானவை
யொளிரும் வண்ணம் இருவுள்ளங்கைகளினாலும் தொட்டு
இனிமையுட னழைத்துப் பக்கத்திலுட்காரச் செய்து
இன்பத்துடன் தானுமிருந்தான்.
1767.மூரியட லேறபுதுல்
முத்தலிபு மைந்தர்
மாரிபொரு வாதகர மன்னவனை நோக்கித்
தேருமதி யாற்பல தெரிந்துபுக ழோடு
மாரமுத மானசில நன்மொழி யறைந்தார்.
17
(இ-ள்) அவ்வாறிருக்கவே, மேலான
வீரத்தைக் கொண்ட சிங்கத்திற்கொப்பான அப்துல்
முத்தலிபென்பவரின் புத்திரசிகாமணியாகிய
அபீத்தாலிபென்பவர் மேகங்களு மொப்பாகாத கைகளையுடைய
ஹபீபரசனைப் பார்த்துத் தெளிவினைக் கொண்ட தமது
அறிவினாலும், பலவற்றையும் உணர்ந்த கீர்த்தியினாலும்,
மேன்மையையுடைய அமுதத்திற்குச் சமமான சில நன்மை
பொருந்திய வார்த்தைகளை எடுத்துக் கூறினார்.
1768.ஓதுநெறி
நீதியபித் தாலிபுரை கேட்டுச்
சீதமதி போலுமொளிர் செம்முக மிலங்க
வாதரவி னோடுமகிழ் வின்சிர மசைத்துச்
சோதிமதிள் சூழ்திமஸ்கி னுக்கிறைசொல்
வானால்.
18
(இ-ள்) அபீத்தாலி பென்பவர்
அவ்வாறு கூறிய சன்மார்க்கத்தினது ஒழுங்கினைக் கொண்ட
அவ்வார்த்தைகளை ஒள்ளிய மதில்கள் சூழப்பெற்ற திமஸ்கு
நகரத்தினது
|