|
முதற்பாகம்
1772.மாறுபக ரற்கரிய
மக்கநக ரத்திற்
றேறுமறை மன்னவர் செழுங்குறைசி மன்னர்
கூறுவதி லொன்றுபடி றின்றுகுல முற்றும்
வேறுபடல் வேதவிதி யன்றுபுகழ் மிக்கோய்.
22
(இ-ள்) மிக்க கீர்த்தியையுடைய
அபீத்தாலிபே! பேதஞ் சொல்லுதற்கரிய இம்மக்கமா
நகரத்தின் கண்ணுள்ள வேதங்களில் தெளிவடைந்த
அரசர்களும், செழுமையான குறைஷிக் குலத்திலுள்ள
இராஜர்களும், சொல்லுவதில் ஒன்றேனும் பொய்யல்ல.
இங்குள்ள கூட்டத்தாரனைவர்களும் ஒருவருக்கொருவர்
வேறாகுதல் வேதவிதியுமல்ல.
1773.காரண
நினைத்தவர் கருத்துற முடித்திப்
பாரிலிறை தூதுவ ரெனப்பகர்தல் வேண்டும்
வேருமொரு தூருமிலை யென்பதொரு விஞ்சை
யார்வமொடு கொண்டுநபி யென்பதியல் பன்றே.
23
(இ-ள்) அன்றியும்,
இவ்வுலகத்தின்கண் யாதேனும் ஓர் காரணத்தைச்
சிந்தித்த அவர்களின் கருத்தானது பொருந்தும் வண்ணம்
நிறைவேற்றிக்காட்டி யான் அல்லாகு சுபுகானகுவத்த
ஆலாவின் தூதரென்று சொல்ல வேண்டும். ஒப்பற்ற வேரும்
தூருமில்லையென்பதான ஒரு மாயாஜாலத்தை ஆர்வத்துடன்
கொண்டு யான் நபியென்று சொல்வது இயல்பல்ல.
1774.நன்றிவை
யறிந்திடுவ துண்டுநபி தம்மை
யின்றவை யிடத்தினி லழைத்திடுக வென்ன
வென்றிவிறல் சேருமபித் தாலிபை விளித்து
மன்றல்கம ழுந்திமஸ்கு மன்னவ னுரைத்தான்.
24
(இ-ள்) நல்லது இவைகளை அறியும்
மார்க்கமானதுண்டு. இன்றைய தினமே அந்நபியென்பவரை
இந்தச் சபையின்கண் அழைப்பாயாக என்று வெற்றியும்
வீரமும் பொருந்திய அபீத்தாலிபென்பவரைக் கூப்பிட்டு
வாசனையானது பரிமளியா நிற்கும் திமஸ்கு நகரத்தினது
அரசனான ஹபீபென்பவன் கூறினான்.
1775.மந்தர
மதிற்றிமஸ்கு மன்னவ னுரைப்பச்
சிந்தைகளி கொண்டபுதுல் முத்தலிபு செல்வ
ரிந்தமொழி நன்கென வெடுத்துற வியத்திச்
சந்தென வொருத்தனை யழைத்தனர் தனித்தே.
25
(இ-ள்) மலைகளை நிகர்த்த
மதில்களையுடைய திமஸ்கு நகரத்தினது அரசனான
ஹபீபென்பவன் அவ்வாறு கூற, அப்துல் முத்தலிபென்பவரின்
புத்திரப் பேறாகிய அபீத்தாலிபென்பவர்
|