பக்கம் எண் :

சீறாப்புராணம்

666


முதற்பாகம்
 

1779.மாதவமு கம்மதின் வனப்பினை நுகர்ந்த

    தூதனொரு வில்லினிடு தூரமதி னின்று

    காதலொடு மெய்யணி கலன்களை யொதுக்கிச்

    சூதற விரிந்தமணி வாய்புதைத்துச் சொல்வான்.

29

      (இ-ள்) மகாதவத்தையுடைய நமது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் அழகை அவ்வாறு குடித்த அந்தத் தூதுவன் ஓர் வில்லிடு தூரத்தினப்பால் நின்று தனது சரீரத்தின்கண் தரித்திருக்கும் ஆபரணங்களையும் வஸ்திரத்தையும் ஒதுங்கும்படி செய்து ஆசையோடும் வஞ்சகமில்லாது அழகிய விரிந்த வாயை கைகளால் மறைத்துக் கொண்டு சொல்ல ஆரம்பித்தான்.

 

1780.பவக்கட னடுப்படு மனுப்பகுதி யெல்லா

    முவப்பொடு கரைப்படு மரக்கலம தொத்தே

    நவப்பட வுதித்தநபி நாயக விளக்கே

    துவக்கமுடி விற்கொரு சுடர்க்கதிரின் மிக்கோய்.

30

      (இ-ள்) பாவச் சமுத்திரத்தினது மத்தியிலகப்பட்ட மானுஷீகக் கூட்டங்களனைத்தையும் உவப்புடன் கரை சேர்க்கா நிற்கும் மரக்கலத்தினை நிகர்த்து அற்புதத்தோடும் உதயஞ் செய்த நபிமார்களுக்கெல்லாம் நாயகமான தீபமே! ஆதியந்தத்திற் கொப்பற்ற கிரணங்களையுடைய சூரியனைப் பார்க்கிலும் மேலானவரே!

 

1781.தேனமர் பொழிற்றிமஸ்கு மன்னொடு செறிந்திம்

    மானகரின் வீரரு மதிக்குடை கவித்த

    கோனபுதுல் முத்தலிபு புத்திரரு முற்றே

    யீனமற நும்மைவர வென்றனர்க ளென்றான்.

31

      (இ-ள்) வண்டுகளானவை உறையப் பெற்ற சோலைகளையுடைய திமஸ்கு நகரத்தினது மன்னவனான ஹபீபென்பவனோடு இப்பெருமை பொருந்திய மக்கமா நகரத்தின் கண்ணுள்ள வீரர்களும் சந்திரவட்டக் குடை கவியப் பெற்ற அரசராகிய அப்துல் முத்தலிபென்பவரின் புத்திர சிகாமணியான அபீத்தாலிபென்பவரும் நெருக்கமாயிருந்து கொண்டு உங்களைக் குற்றமற வரும்படி அழைத்தார்களென்று சொன்னான்.

 

1782.வருகவென நன்மொழி வகுத்தனர்க ளென்ன

    வருகினிது றைந்தவ னறைந்தது தெளிந்தே

    தருமநெறி நந்நபி தருக்கொடு மகிழ்ந்தே

    மருமலர் பொதிந்தமணி மாளிகை புகுந்தார்.

32

      (இ-ள்) இனிமையோடும் பக்கத்தில் தங்கியிருந்தவனாகிய அத்தூதுவன் வருவீர்களாகவென நன்மை பொருந்திய