பக்கம் எண் :

சீறாப்புராணம்

668


முதற்பாகம்
 

தங்களை அழைத்தார்களென்று கூறும் புன்மையான வார்த்தையை வாசனை தங்கிய விசாலமான தோள்களையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் கூறிய மாத்திரத்தில் தங்களினறிவானது நீங்கப் பெற்றார்கள்.

 

1786.காரதி ரிடிக்கெதிர் கலங்கித் தன்னுடல்

    சோர்தரு மயிலெனச் சோர்ந்து கண்ணினீர்

    வார்தரு கலன்கலை நனைப்ப வார்குழல்

    பார்தர விரிப்பமெய் பதைத்து வாடினார்.

36

      (இ-ள்) அன்றியும், மேகத்தின்கண் ஒலியா நிற்கும் இடிக்கு முன்னால் பயந்து தனது சரீரமானது சோர்வடையப் பெறும் மயில்போலச் சோர்வுற்று கண்களிலிருந்தொழுகும் நீரானது ஆபரணங்களையும் வஸ்திரத்தையும் நனையும்படி செய்ய நீண்ட கூந்தலானது பூமியிற்படும்படி விரியச் சரீரமானது துடித்து வாட்டமுற்றார்கள்.

 

1787.மறைத்திடா மதியென வளருந் தீனிலை

    நிறைத்தநற் பதவியை நிலத்தி லெங்களுக்

    குறத்தரு மிறைவவுன் றூத ருன்றிருப்

    புறத்தினி லடைக்கல மென்னப் போற்றினார்.

37

      (இ-ள்) அவ்வித வாட்டமுற்ற கதீஜா றலியல்லாகு அன்ஹா அவர்கள் யாவராலும் மறைக்கக் கூடாத சந்திரனைப் போலும் நாளுக்குநாள் வளரா நிற்கும் தீனுல் இஸ்லாமென்னும் மெய்மார்க்கத்தினது நிலைமையினால் நிறைக்கப் பெற்ற நன்மை பொருந்திய பதவியை இவ்வுலகத்தின்கண் எங்களுக்கு மிகவும் தருகின்ற இறைவனே! உனது தூதுவராகிய எங்கள் நாயகம் ஹபீபு றப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் உனது திருச்சந்நிதானத்தில் அடைக்கலமென்று சொல்லித் துதித்தார்கள்.

 

1788.நவ்விபின் பெரும்புன னடந்த நந்நபி

    மௌவலங் குழற்கதி சாதம் வாட்டங்கண்

    டவ்வயி னினிதுற வடுத்து நன்மறைச்

    செவ்விய தெருட்சியிற் றெளியச் செப்புவார்.

38

      (இ-ள்) ஜலத்தைக் கொண்ட பெரிய ஆற்றின்கண் மானினது பின்னால் நடந்து சென்ற நமது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வாசனைதங்கிய அழகிய கூந்தலையுடைய கதீஜா றலியல்லாகு அன்ஹா அவர்களின் அவ்வித வாட்டத்தைப் பார்த்து அவர்களின் சமூகத்தில் நெருங்கி நன்மை பொருந்திய வேதவாசகத்தினது அழகிய