பக்கம் எண் :

சீறாப்புராணம்

766


முதற்பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு சார்ந்து நானா பக்கங்களிலும் வீசா நிற்கும் பிரகாசத்தினது அழகைப் பொருந்திய திருமேனியை யுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் கொன்றை மரங்களும், எலுமிச்ச மரங்களும், கரிய கொம்புகளையுடைய ஈத்த மரங்களும், மூங்கில்களும்,  தம்மில் ஒன்றோடொன்று பின்னி நெருங்கிய நிழலும், நல்ல நீரைப் பொழிகின்ற தானமும், சிவந்த தேனினது வாசனையைக் கொண்ட ஒள்ளிய புஷ்பங்களும் மாறாத சோலைகள் ஒளிரப் பெற்ற அந்த மலையினிடத்துப் போனார்கள்.

 

2055. வனந்திரி விலங்கு மாய்த்து வன்றசை வகிர்ந்து வாரித்

     தினந்தொறுங் கோலிற் கோலித் தீயிடை யமிழ்த்திக் காய்த்தித்

     தனந்தனி யிருந்து தின்று தன்றசைப் பெருக்க லன்றி>

     யனந்தலிற் பொழுதும் வேறோ ரறிவென்ப தறிந்தி லானே.

4

      (இ-ள்) அங்கு பிரதி தினமும் காட்டின்கண் திரிகின்ற மிருகங்களைக் கொன்று வலிமையை யுடைய அதன் மாமிசத்தை அறுத்து வாரிக் கொம்புகளில் வளைத்துத் தீயின்கண் அமிழச் செய்து சுட்டு மிகவும் ஏகமாக இருந்து அருந்தித் தனது மாமிசத்தை அதிகப்படச் செய்வதே யல்லாமல் நித்திரை சமையத்தி லாயினும் வேறேயொரு அறிவென்பதை அறியாதவன்.

 

2056. காலினிற் கழலு நீண்ட கரியகா ழகத்தின் வீக்கும்

     பாலினில் வலையுங் கையிற் பருவரைத் தனுவுங் கூருங்

     கோல்வெறி துணியுந் தோளிற் கூன்பிறை வாளு மென்மை

     வாலுடைப் பறவை சேர்த்துங் கண்ணியு மருங்கிற் கொண்டோன்.

5

      (இ-ள்) அன்றியும், காலின்கண் செருப்பையும், அரையில் நீட்சியுற்ற கரிய கந்தையினது கட்டையும், பக்கத்தில் வலையையும், கரத்தில் பருத்த அளவையுடைய கோதண்டத்தையும், முதுகில் அச்சத்தை தருகின்ற கூரிய அம்பினது தூணியையும், தோளினிடத்து வளைந்த இளஞ் சந்திரனை நிகர்த்த வாளாயுதத்தையும், இடையில் மேன்மையைப் பெற்ற வால்களையுடைய பட்சிகளைச் சேரச் செய்யும் கண்ணிகளையும் கொண்டவன்.

 

2057. குறுவெயர்ப் புதித்த மெய்யுங் கொழுந்தசை மணத்த வாயும்

     பறிதலை விரிப்புங் கூர்ந்த படுகொலை விழியு மாக

     வறபினி லறபி வேட னடவியிற் றொடர்ந்தோர் மானைக்

     கறுவொடும் வலையிற் சேர்த்திக் கட்டிவைத் திருப்பக் கண்டார்.

6