பக்கம் எண் :

சீறாப்புராணம்

802


முதற்பாகம்
 

      (இ-ள்) அவ்விதம் வருத்தமாய் அவு சென்னுங் கூட்டத்தார்களுக்கு கசுறசு வென்னும் கூட்டத்தார்களின் சேனைக ளியாவும் துன்பத்தினாற் றோல்வி யுற்று ஓடினார்களென்று பெருமையையுடைய பெரிய கீர்த்தியானது அதிகப்பட்டு வளைந்த எண்டிசைகளிலு முள்ள நாடுக ளெல்லாவற்றிலும் தெரியும்படி சென்றது.

 

2164. நபிதமைக் கண்டுரை நடத்தி வெற்றியும்

      புவியினிற் பெற்றனம் பொருந்தி னோமெனி

      லெவர்நமக் கெதிரவர்க் கியைவ தேயென

      அவுசெனும் பெருங்குலத் தவர்கள் கூறினார்.

24

      (இ-ள்) அன்றியும், அவுசென்று கூறாநிற்கும் பெரிய கூட்டத்தார்கள் நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் பார்த்து வார்த்தைகளாடி இந்தப் பூலோகத்தின்கண் விஜயத்தையும் பெற்றோம். அந்நபிக ணாயகமவர்களுக்குச் சம்மதிப்போமே யானால் நமக்குச் சத்துராதி யாகப் பொருந்துவோர் யாவர்? ஒருவருமில்லரென்று சொன்னார்கள்.

 

2165. முகம்மதின் தீனிலை வழிசெல் வோமென

     வகமகிழ்ந் தவுசினத் தவர்கள் கூறலும்

     புகழொடு மறுவர்க ளெழுந்து பொன்னில

     நகரெனு மக்கமா நகரை நண்ணினார்.

25

      (இ-ள்) அன்றியும், அவுசென்னும் கூட்டத்தார்கள் நாயகம் ஹபீபு றப்பில் ஆலமீன் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் தீனுல் இஸ்லா மென்னும் மார்க்க நிலைமையினது நெறியிற் போகுவோ மென்று மனக்களிப்படைந்து சொல்லிய மாத்திரத்தில் கீர்த்தி யோடும் ஆறுபேர்க ளெழும்பிச் சொர்க்கலோகப்பதி யென்று கூறா நிற்கும் திரு மக்கமா நகரத்தைப் போயடுத்தார்கள்.

 

2166. மறுவறு மவுசெனுங் குலத்து மன்னவ

     ரறுவரு நபிபத மடுத்துச் செவ்வியி

     னுறுகலி மாவெடுத் தோதி யன்பரா

     யெறுழ்வலி யொடுமிசு லாமி லாயினார்.

26

      (இ-ள்) களங்கமற்ற அவுசென்று கூறும் கூட்டத்து அரசர்களான அந்த ஆறு பேர்களும் நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் திருவடிகளைச் சமீபித்து அழகினாற் பொருந்திய “லாயிலாஹ இல்லல்லாஹூ முஹம்மதுர் றசூலுல்லாஹி” யென்னும் கலிமாவை எடுத்துக் கூறி