முதற்பாகம்
அன்பராய்
மிகுத்த வலிமையோடும் தீனுல் இஸ்லா மென்னும்
மார்க்கத்திலானார்கள்.
2167. வாருதி யெனவரு மதீன
மென்னுமவ்
வூரவர் நமக்குயிர்த் துணைவ ராகிய
பேரெனப் படைத்தனம் பெரிய னாலென
வேர்பெற நபிமன மகிழ்ந்தி ருந்தனர்.
27
(இ-ள்) நமது நாயகம் எம்மறைக்குந்
தாயகம் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் சமுத்திரத்தைப்
போலும் வரா நிற்கும் திரு மதீனமென்று கூறும்
அந்நகரத்தவர்களை நமக்கு உயிரை நிகர்த்த தோழர்க
ளெனப் பெரியவனான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவினாற்
சம்பாதித்தோ மென்று அழகு பொருந்தக்
களிப்புற்றிருந்தார்கள்.
அறுசீர்க்கழி
நெடிலடியாசிரிய விருத்தம்
2168.
பின்னுதிரைக்
கடனிலத்தில் விளங்குபுக
ழுசைனயினார் பெரும்பே றான
மன்னவர்மன் னபுல்காசீ மனத்தினுநா
வினுமறவா திருத்தி வாழ்த்து
மின்னவிர்செம் மலர்ப்பதத்தாண் முகம்மதுதம்
பெருமறைத்தீன் வேர்விட் டோடி
யெந்நிலமு மிசுலாமின் கொழுந்துபல
படர்ந்தேறி யிலங்கிற் றன்றே.
28
(இ-ள்) பின்னிய அலைகளின்
சமுத்திரத்தைக் கொண்ட இந்தப் பூலோகத்தின்கண்
விளங்கிய கீர்த்தியை யுடைய உசைன் நயினாரென்பவரின்
பெரிய பேறான இராஜாதி ராஜனாகிய இந்நூலினது உதார
நாயகன் அபுல்காசீ மென்பவனின் இருதயத்தின் கண்ணும்
நாவின் கண்ணும் மறவாது இருக்கும்படி செய்து துதியா
நிற்கும் பிரகாசமானது ஒளிர்கின்ற சிவந்த தாமரை
மலர்போலும் திருவடிகளினது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் பெருமை
தங்கிய புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது தீனானது
எவ்விடங்களிலும் தனது வேரை விட்டு ஓடி இஸ்லாம்
மார்க்கத்தினது பல கொழுந்துகளைப் பரப்பி ஓங்குதலுற்று
இலங்கிற்று.
2169.
உலகடங்கத் தனியரசு
செலுத்தும் பெரி
யவனருளா லுயர்வா னீந்தி
யலகில்கதிர்ச் சிறைச்சபுற யீலகும
துறைந்தகுவ டடுத்தன் பாக
|